Chennai Rains: `ப்ளீஸ், காரை ஸ்டார்ட் மட்டும் பண்ணிடாதீங்க!' - எல்லாப் பிரச்னையும் சரியாகிவிடும்!

'மிக்ஜாம்' புயல் ஆந்திராவைக் கடந்து விட்டது. ஆனால் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கார்/பைக்குகள், முட்டுச்சந்தைக்கூடத் தாண்ட முடியவில்லை. சும்மாவே பின்னே... கார்களும் பைக்குகளும் ஸ்விம்மிங் பழகிக் கொண்டிருக்கின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய கார்களை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துவிட்டு, இன்ஜின் சீஸ் ஆகி, சர்வீஸ் சென்டருக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஸ்டார்ட்டிங்கிலேயே ஒரு சிம்பிள் டிப்ஸ்: வெள்ளத்தில் கார்/ பைக் மூழ்கிவிட்டால், அதை ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பதுதான் பெரிய செலவைக் கொண்டு வரும். இன்ஜின் ஆயில், பெட்ரோல் போன்றவற்றை முழுவதுமாக டிரெயின் செய்து விட்டு, ஒரு கம்ப்ளீட் ஜெனரல் சர்வீஸ் செய்தாலே எல்லா பிரச்சனைகளும் சால்வ் ஆகிவிடும். இந்த வெள்ள நேரத்தில் கார்களை எப்படி ஓட்ட வேண்டும், பராமரிக்க வேண்டும் என்பதற்கு மேலும் சில சிம்பிள் டிப்ஸ் பார்க்கலாம்.

கார்

தண்ணீர் நிறைந்த ஏரியாவில் போகும்போது, காராக இருந்தாலும் சரி – பைக்காக இருந்தாலும் சரி – கிராஜுவல் ஆக்ஸிலரேஷன் தேவை. முதல் கியர்தான் பெஸ்ட். காரின் ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுப்பதை, பைக்கின் ஆக்ஸிலரேட்டரில் இருந்து கையை எடுப்பதை டீ–ஆக்ஸிலரேஷன் என்பார்கள். இந்த De-Acceleration ரொம்பத் தப்பு பாஸ். இதனால், சக்ஸன் ஏற்பட்டு தண்ணீர் சைலன்ஸருக்குள்ளேயோ, வாகனம் ஆஃப் ஆகும் நிலைமையோ ஏற்படும். இதை ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக் என்பார்கள்.

மழை நேரங்களில் காரில் போகும்போது, ‘குளுருது’ என்று ஏசி–யை ஆஃப் செய்துவிட்டும் சிலர் பயணிப்பார்கள். இதுவும் தவறு. இதனால் கண்ணாடி மற்றும் விண்ட்ஷீல்டுகளில் ஃபாக் ஏற்பட்டு பாதையே தெரியாமல் போகும். முடிந்தவரை ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் பயன்படுத்தினால்… கம்ப்ரஸர் ரொம்ப நாள் வேலை பார்க்கும்.

சிலருக்கு ஃபாக்தான் படுத்தி எடுக்கும். விண்ட்ஷீல்டு முழுவதும் பனி படர்ந்து வெளிச்சாலையே தெரியாது. இந்த நேரத்தில் காரின் ஏசியில் இருக்கும் ரீ–சர்க்குலேஷன் மோடு மற்றும் ஃப்ரெஷ் ஏர் இன்டேக் மோடு இரண்டையும் கவனித்துப் பயன்படுத்த வேண்டும். இதில் இரவு நேரம் என்றால், ஹை பீம் தொந்தரவுகள் வேறு கண்ணைக் கூசும். டீஃபாகர் உள்ள கார்களில் பிரச்னை இருக்காது. சாதாரண கார்களில் நிறைய பேர் இந்தத் தொந்தரவுக்கு ஆளாவார்கள். ஏர் வென்ட்டுகளை மேல்நோக்கி வைத்துவிட்டு, முதலில் வெறும் புளோயரை மட்டும் ஓட விடுங்கள். பிறகு ‘ஃப்ரெஷ் ஏர்இன்டேக் மோடு’–ஐ ஆன் செய்யுங்கள். அதாவது வெளிக்காற்று உள்ளே வர வேண்டும். இப்போது பனி சட்டென மறையும். (ரீ–சர்க்குலேட் மோடில் வைத்தால் பனி சனி மாதிரி காரிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்!)

கார்

ஹைட்ரோ பிளானிங் என்றொரு விஷயம் ஆட்டோமொபைலில் இருக்கிறது. நீர் தேங்கிய சாலையில் செல்லும்போது, கார் திடீரென எடை குறைந்தது போன்ற உணர்வு எழும். அப்போது ஸ்டீயரிங்கும் இலகுவாக இயங்கினால், நீங்கள் சாலையில் செல்லாமல் நீரின் மீது மிதக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதுதான் ஹைட்ரோ பிளானிங். அதேபோல, ரியர் வியூ கண்ணாடி மூலம் பின்பக்கத்தைப் பாருங்கள். உங்கள் கார் டயரின் தடம் நீரில் தெரியவில்லை என்றால் இந்த அக்வா பிளானிங்கில்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். டயருக்கும் சாலைக்குமான இடைவெளி குறைவாக இருந்தால், உராய்வு குறைந்து டயர் வழுக்கும். இதுதான் இந்தப் பிரச்னை. இதற்கு ஒரே ஒரு தீர்வு என்ன தெரியுமா… ஸ்லோவாகப் போவதுதான்.

நீங்கள் ஃப்ரன்ட் வீல் டிரைவ் காரில் பயணிக்கிறீர்கள் என்றால், எந்தப் பக்கமாக கார் வழுக்கிக் கொண்டு திரும்புகிறதோ, அதே பக்கம் ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி ஆக்ஸிலரேட்டரை மிதமாக ரிலீஸ் செய்ய வேண்டும். இதுவே ரியர் வீல் டிரைவ் கார் என்றால், வழுக்கும் திசைக்கு எதிர்ப்பக்கமாக ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி மிதமான ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டும்.

மழையில் ஏசியை ஆஃப் செய்வது தவறுதான். ஆனால், இது டிரைவிங்கின்போதுதான். நின்று கொண்டிருக்கும் கார்களில் அதுவும், தண்ணீர் நிறைந்த ஏரியாக்களில் காரை ஐடிலிங்கில் விட்டு ஏசியை ஆன் செய்து நீண்ட நேரம் இருப்பது தவறு. போன வெள்ளத்தில் சிக்கிய ஒருவர், கீழே இறங்க வழியில்லாமல் காருக்குள்ளேயே ஏசியை ஆன் செய்து தூங்கியிருக்கிறார்.

சைலன்ஸர் வழியாக வரும் கார்பன் மோனாக்ஸைடு நச்சுக்காற்று காருக்குள் சுழல ஆரம்பித்து, அவர் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவர் செய்த தவறுகள் இரண்டு – அட்லீஸ்ட், அவர் கதவைக் கொஞ்சமாவது திறந்திருக்கலாம். அல்லது ஏர் ரீ–சர்க்குலேஷன் மோடை ஆன் செய்திருக்கலாம்.

பொதுவாக கார்/பைக்குகளை பார்க் செய்யும்போது, முடிந்தவரை மரங்களுக்குக் கீழே பார்க் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இது வெயிலுக்கு வேண்டுமானால் பொருந்தும்; அப்படி ஒரு மழை நாளில் காற்றடித்து மரக்கிளைகள் விழுந்து என் கார் விண்ட்ஷீல்டே காலியாகிப் போன சோகம் இன்னும் மறக்க முடியவில்லை.

மழை வெள்ளத்தில் கார்/பைக் ஆஃப் ஆகிவிட்டால், அதுதாங்க ‘ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்’ இந்த நேரத்தில் - தயவுசெய்து திரும்பத் திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். ‘க்க்ஞக்ஞகங’ என்று க்ராங்க் ஆவது இன்ஜினுக்கு நாம் செய்யும் கொடுமை. இன்ஜின் கனெக்டிங் ராடு உடைந்து, இன்ஜின் மொத்தமாக சீஸ் ஆகவும் வாய்ப்புண்டு.

மழை நேரத்தில் கார்/பைக்கை நனையவிட்டு, ‘அப்பாடா வாட்டர் வாஷ் பண்ணத் தேவையில்லை’ என்று சிலர் செம கூலாகச் சொல்வார்கள்.

இது எல்லா மழைக்கும் பொருந்தாது. நேரடியாக விழும் மழை நீர் என்றால் பிரச்னை இல்லை; கட்டிடம் வழியாக, மரங்கள் வழியாக விழும் நீர் விழுவது சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மழை முடிந்தபிறகும் ஒரு வாட்டர் வாஷ் நல்லது. சிலர் காரில் விண்ட்ஷீல்டு வைப்பர்களை அப்படியே ஆன் செய்வார்கள். அதுவும் தவறு. வைப்பர் பிளேடுகளைத் துடைத்துவிடுங்கள். அதேபோல், காரை ஆன் செய்துவிட்டுத்தான் வைப்பரை ஆன் செய்ய வேண்டும். வைப்பர் மோட்டார் காலியாக வாய்ப்பு இருக்கு சார்!



from ஆட்டோமொபைல் https://ift.tt/9AXrHSB

Post a Comment

0 Comments

o