உலகின் முன்னணி நிறுவனங்களான Amazon, Asus, Dell, Google, Samsung, Sony, LG, Mercedes-Benz, Hyundai, Intel, Qualcomm போன்ற பல நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ (CES), 2024 ஜனவரி 9 முதல் லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகிறது. 

அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற கார் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம், மொபியன் (Mobion) என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இ-கார்னர் சிஸ்டம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
Hyundai Mobis - Mobion

மொபியன் காரால் மற்ற வாகனங்களால் செல்ல முடியாத வழிகளிலும் செல்ல முடியும். வெவ்வேறு திசைகளில் நகரக்கூடிய நான்கு சிறப்புச் சக்கரங்கள் உள்ளன. இந்தச் சக்கரங்கள் பக்கவாட்டாகச் செல்லலாம், குறுக்காக ஓட்டலாம் மற்றும் ஒரே இடத்தில் திரும்பலாம். இ-கார்னர் டெக்னாலஜி இந்த இயக்கங்களைச் செய்கிறது. காரின் 4 வீல்களையும் 90 டிகிரி வரை திருப்ப, இ-கார்னர் சிஸ்டம் உதவுகிறது. இதன் மூலம் காரை 360 டிகிரியில் திருப்புவது, 180 டிகிரியில் திருப்புவது, இக்கட்டான பார்க்கிங் இடத்தில் காரை பார்க் செய்வது என காரை எப்படி வேண்டுமானாலும் இருந்த இடத்திலிருந்தே திருப்ப முடியும். இதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. 

இதில் 4 முக்கியமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அதில் முக்கியமானது காரை முன்னோக்கி நகர்த்த உதவும் 'இன்-வீல்' தொழில்நுட்பம். இன்-வீல் தொழில்நுட்பம் என்பது பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களைப்போல ஒரு பெரிய மோட்டாருக்குப் பதிலாக ஒவ்வொரு சக்கரத்திலும் நான்கு சிறிய மோட்டார்கள் உள்ளன.

இரண்டு கார்களுக்கு நடுவே காரை பார்க் செய்யச் சிரமமாக இல்லாமல் 4 வீல்களும் 90 டிகிரி வரை திருப்பி காரை பார்க் செய்யலாம். இது ‘நண்டு நடை போல் இருக்கிறது’ எனப் பலரும் கூறுகிறார்களாம்.

ஒரு குறுகலான பாதையில் சிக்கிக்கொண்டால் ரிவர்ஸ்தான் எடுக்க வேண்டும் என்று கிடையாது. நான்கு வீல்களையும் 90 டிகிரி வரை மட்டும் திருப்பி, காரை 360 டிகிரி சுற்றி காரை ஓட்டிச் செல்லலாம். இதற்கு ‘ஜீரோ திருப்பம்’ எனப் பெயர்.

நெருக்கடியான கார் பார்க்கிங்கில் நிறுத்துவதற்காக, ‘பிவட் திருப்பம்’ (Pivot Turn) என்ற டெக்னிக்கை அறிமுகப்படுத்தியுள்ளனர் இந்த கார் நிறுவனத்தினர். இதன் மூலம் முன் சக்கரங்களை நகற்றாமல் பின் சக்கரங்களை மட்டும் 90 டிகிரி வரை திருப்பி, காரை வேண்டும் என்றவரை சுற்றி எளிதில் பார்க் செய்து கொள்ளலாம்.

இ-கார்னர் அமைப்பைத் தவிர, Mobion அதன் சிறப்பு சென்ஸார்கள் மற்றும் சுய ஓட்டுநர் கார்களுக்கான விளக்குகளையும் கொண்டுள்ளது. இந்த சென்ஸார்கள் லிடார் எனப்படும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார் தானாகவே செயல்பட உதவுகிறது. காரில் மூன்று LiDAR சாதனங்கள் உள்ளன. இரண்டு ஹெட்லைட்டுகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. ஒன்று காரின் முன்பக்கத்தின் நடுவில் உள்ளது. 

மொபிஸ் நிறுவனம், கார்களுக்கான பிரத்யேக விளக்குகளையும்  தயாரிக்கிறதாம். அருகில் ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பதற்கு LiDAR என்ற சிறப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பின்னர், அந்த நபர் எந்த வழியில் லேனைக் கடக்கிறார் என்பதைக் காட்ட விளக்குகளைப் பயன்படுத்துகிறது. லேனைக் கடக்கும் நபர் இருப்பதைப் பற்றி மற்ற டிரைவர்களை எச்சரிக்கும் வகையில் காரின் பின்புறத்தில் விளக்குகள் உள்ளன.
Hyundai Mobis - Mobion

ஹூண்டாய் மொபிஸின் துணைத் தலைவரும் மேம்பட்ட பொறியியல் தலைவருமான லீ சியுங்-ஹ்வான், ‘‘ஹூண்டாய் மொபிஸின் முக்கியத் தொழில்நுட்பங்களின் உருவகத்தை Mobion பிரதிபலிக்கிறது. இவை அனைத்தும் உடனடி வெகுஜன உற்பத்திக்குத் தயாராக உள்ளன!" என்று கூறினார்.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டெமோ வீடியோவில் காரைப் பற்றிய முழு விவரமும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று வெளியாகியுள்ளது.

நம் ஊரின் டைட் பார்க்கிங்குக்கு Mobion மாதிரி ஒரு கார்தான் தேவை! 


from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/HzGy49V