`அம்பானி மிஸ் பண்ணிய ரோல்ஸ் ராய்ஸ் கார்' ரூ.10.5 கோடிக்கு முதலில் வாங்கிய தனவான்; அட,சென்னைக்காரரா?

கோலி 50–வது சதத்தை அடித்து சச்சினின் ரெக்கார்டை முறியடித்த சாதனை வலைதளங்களில் வைரலாகப் போய்க் கொண்டிருந்த நேரம்தான், இன்னொரு விஷயமும் வைரலாகப் போய்க்கொண்டிருந்தது. 

பிரிட்டிஷ் கார் மேக்கரான ரோல்ஸ்ராய்ஸ் காரின் எலெக்ட்ரிக் கார் – அதன் பெயர் ஸ்பெக்டர் (Spectre) சென்னையில் டெலிவரி செய்யப்பட்டது என்கிற அந்தச் செய்தி. ரோல்ஸ்ராய்ஸில் எலெக்ட்ரிக் கார் லாஞ்ச் ஆனதே பலருக்குத் தெரியாத நிலையில், அந்த 10 கோடி ரூபாய் கார் சென்னையில் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறதா என்று அனைவரும் ஆன்லைனில் தேட ஆரம்பித்து விட்டனர். 

‘யாருப்பா அந்தத் தனவான்’ என்று தேடியபோது, சென்னையைச் சேர்ந்த ‘பாஷ்யம்’ எனும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் யுவராஜ்தான் இந்தக் காரை டெலிவரி எடுத்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது.

ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் இன்னும் எந்தச் செல்வந்தர்களும் இந்த ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டரை டெலிவரி எடுக்காத நிலையில், யுவராஜ்தான் இந்தியாவின் முதல் ஸ்பெக்டர் உரிமையாளர். முகேஷ் அம்பானி போன்ற தனவான்கள் Left the Chat என்று கமென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். யுவராஜைத் தொடர்பு கொள்ள முயன்றோம். நாட் ரீச்சபிள்! 

எந்தக் காராக இருந்தாலும் தேடி ஓடிப் போய் வாங்கும் செலிபிரிட்டிகளில் அம்பானி எப்படி இதை மிஸ் செய்தார் என்றும் கேட்டு வருகிறார்கள். காரணம், ரோல்ஸ்ராய்ஸின் புத்தம் புது முதல் எலெக்ட்ரிக் கார் எனும் பெயரைப் பெற்றிருக்கும் ஸ்பெக்டர் காரை, அதிகாரப்பூர்வமாக ரோல்ஸ்ராய்ஸ் விற்பனைக்கே இன்னும் அறிமுகம் செய்யவில்லை. அதற்குள் டெலிவரியா என்கிற விஷயம்தான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. அட ஆமாங்க! நாமளே அடுத்த மாசம்தான் இதோட விற்பனையே தொடங்குது என்று நினைத்திருந்த வேளையில், பாஷ்யம் யுவராஜுக்கு சபாஷ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எல்லோரும்.

அநேகமாக இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.10.5 கோடிக்கு மேல் வந்திருக்கலாம். அது எல்லாம் ஓகே! அப்படி என்ன அந்த ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கணுமா?


from ஆட்டோமொபைல் https://ift.tt/MXRy9VG

Post a Comment

0 Comments

o