Ratan Tata: "கர எடககமபத கழ நய படததரககன பரஙக! - ரததன டட சனன அறவர!

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு நாய்கள் என்றால் உயிர். அலுவலகங்களாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி; நண்பர்களுடன் பேசுவதுபோல எப்போதும் ஏதோவொரு நாயுடன் பேசியபடிதான் இருப்பார்.

மும்பையில் இருக்கும் தனது வீட்டில் நாய்களுக்கெனப் பிரத்தேகமாக ஒரு பெரிய காப்பகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், தெரு நாய்கள் உட்பட பல்வேறு வகையான நாய்களைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அது மட்டுமின்றி, தான் வளர்த்த நாய்களின் நினைவு நாள்களில் நெகிழ்ச்சியாக அவற்றின் புகைப்படங்களுடன் நினைவைப் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ரத்தன் டாடா
அதேசமயம், தெரு நாய்களின் பாதுகாப்பிற்காக பல காப்பகங்களையும் உருவாக்கி அதன் உரிமைகளுக்காக விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது, மழைக்காலங்களில் காரை எடுக்கும்போது, அதன் அடியில் நாய்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கவனமாக எடுக்க வேண்டும் என்றும், மழையின்போது நாய்களுக்குப் புகலிடம் தர வேண்டும் என்றும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மழைக்காலம் தொடங்கிவிட்டது. நிறைய நாய்கள் கார்களுக்கடியில் மழைக்காக ஒதுங்கியிருக்கும். அதனால், கார்களை எடுக்கும்போது அதற்கடியில் நாய்கள் இருக்கின்றனவா என்று பார்த்து கவனத்துடன் காரை எடுங்கள். இல்லையென்றால், காரின் அடியில் புகலிடம் தேடிப் படுத்திருக்கும் நாய்களுக்குக் காயங்கள் ஏற்படும். அவற்றின் கால்கள் காயமடைந்தால் கடைசிவரை கால்களின்றி வாழ நேரிடும்.

சில நேரங்களில் அவற்றின் உயிர் போகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு முறையும் எச்சரிக்கையுடன் நாய்கள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு காரை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தால், இந்த மழைக்காலங்களில் தங்க இடமில்லாமல் தவிக்கும் நாய்களுக்குத் தற்காலிகமாகப் புகலிடம் கொடுத்து அவற்றைப் பாதுகாத்தால் மனதிற்கு நிம்மதியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

டாடா சொல்வது உண்மைதான்; இதில் மனிதாபிமானம் என்பதைத் தாண்டி, ஒரு நல்ல டிரைவருக்கு அழகு - எடுத்தவுடனேயே சீட்டில் அமர்ந்து ஆக்ஸிலரேட்டர் மிதித்துப் பறப்பதில் இல்லை. மழைக் காலங்கள் என்றில்லை; எந்தச் சூழ்நிலையிலும் காரை எடுக்கும் முன் கோவிலில் அங்கப்பிரதட்சனம் செய்வது மாதிரி ஒரு முறை காரைச் சுற்றி வந்து நோட் செய்தபிறகே காரை ஸ்டார்ட் செய்யுங்கள். அதுதான் காருக்கும் உங்களுக்கும் அடுத்த உயிர்களுக்கும் நல்லது!



from ? ஆட்டோமொபைல் https://ift.tt/oYHsu0F

Post a Comment

0 Comments

o