பவம ஓல ஏததர டவஎஸ - யரககம எலகடரக ஸகடடர வஙக இனடரஸட இலல; ஏன தரயம?

பெட்ரோலுக்காக பர்ஸைத் திறக்காமல் பெருமைப்படுவது எல்லாம் ஓகேதான்! ‘என்னது, பெட்ரோல் 102 ரூபாயா… மைலேஜ் 35 கிமீதானா… இதுக்கு எலெக்ட்ரிக்குக்கே போயிடுவேன்’ என்று பலர் பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இருந்து எலெக்ட்ரிக்குக்கு மாறியது உண்மைதான். ஆனால், இதெல்லாம் கொஞ்ச மாதங்கள் முன்பு வரை. இப்போது நிலைமை தலைகீழ்!

‘என்னது, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இம்புட்டு விலையா… இதுக்குப் பெட்ரோலே போட்டுடடலாமே’ என்று பலர் எலெக்ட்ரிக்கைப் புறம்தள்ளுவதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையில் இந்த எதிரொலி தெரிய ஆரம்பித்திருக்கிறது.

Ola Showroom

இந்த ஜூன் மாதத்தில் ஓலா ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டால், வெறும் 14,703 ஸ்கூட்டர்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. இதுவே மே மாதம் இதன் விற்பனை 28,617. ஏத்தர் ஸ்கூட்டர் மே மாதம் 15,404 ஸ்கூட்டர்கள் விற்பனையானால், இந்த ஜூன் மாதம் வெறும் 3,422 ஸ்கூட்டர்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. பஜாஜைப் பொருத்தவரை 10,063 ஸ்கூட்டர்கள் விற்பனையானது, ஜூன் மாதம் வெறும் 2,100தான் விற்பனையாகி இருக்கின்றன. ஆம்பியர் மே மாதம் 9,635–ல் இருந்து ஜூன் மாதம் 1,317 ஆகக் குறைந்திருக்கிறது. 2,109 நம்பர்களில் விற்பனையான ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், இந்த ஜூன் மாதம் வெறும் 970 ஸ்கூட்டர்கள்தான் விற்பனை ஆகியிருக்கின்றன. இதைவிட டிவிஎஸ்–ன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணான எலெக்ட்ரிக் பைக் ஐக்யூப் – மே மாதம் 20,396 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியது, இந்த ஜூன் மாதம் வெறும் 5,253 எண்ணிக்கையில்தான் விற்பனையாகி இருக்கிறது. இது கிட்டத்தட்ட 60% சரிவு. இது ஒரு ஷாக்கிங் நியூஸ்!

சில ஆண்டுகளுக்கு பெட்ரோல்/டீசல் விலை ஏறியபோது, இதன் நிலைமையே தலைகீழாக இருந்தது. இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதலபாதாளத்தில் போய்க் கொண்டிருப்பது – கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம். ஆனால், இதற்குக் காரணம் யார் தெரியுமா? எல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள்தான்.

ஆம், முக்கியமாக இவி ஸ்கூட்டர்களின் விலைதான் மக்களுக்குப் பெரிய ஷாக் அடிக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை 1.71 லட்சம். ஓலா ஸ்கூட்டரும் கிட்டத்தட்ட இதைத் தாண்டுகிறது. டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை 1.60 லட்சம் வருகிறது. இப்படிப் பெரிய நிறுவனங்களைத் தாண்டி ஆம்பியர், ஹீரோ எலெக்ட்ரிக், ஒக்கினாவா போன்ற நிறுவனங்களின் நல்ல பேட்டரி டாப் எண்ட் ஸ்கூட்டர்களை வாங்க வேண்டும் என்றாலும், நீங்கள் 1.25 லட்சத்துக்குக் குறையாமல் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. அதாவது, 1 லட்சத்துக்குக் குறைந்து நீங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது என்பது இயலாத விஷயம்.

EV Scooters

‘இதுக்கு நான் பெட்ரோலே போட்டுக்கிறேன் பாஸ்’ என்று அதனால், மறுபடியும் அவர்கள் பெட்ரோல் வாகனங்களுக்கே தாவும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

ஏன் இந்த அதிகப்படியான விலை? ‘நல்லாத்தானய்யா போய்க்கிட்டிருக்கு. லாபம் வரலையோ’ என்றால், இல்லை. இதற்கு அரசின் FAME-II (Faster Adoption and Manufacturing of Electric and Hybrid Vehicles in India) Subsidies–தான் முக்கியமான காரணம்.

ஆம், போன ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து நம் மத்திய அரசு, தனது FAME-II மானியத்தை 40%–த்தில் இருந்து 15 சதவிகிதமாகக் குறைத்து விட்டது. இதுவே இந்த விலையேற்றத்துக்கு முக்கியக் காரணம். இதனால் ஒவ்வொரு ஸ்கூட்டர்களின் விலை சுமார் 15,000 ரூபாய் முதல் ரூ.35,000 வரை விலையேற்றம் கண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை 1 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு FAME-II மானியமாக சுமார் 40,000 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், இப்போது அதற்கு ரூபாய் 15,000 தான் மானியம். அதனால், வாடிக்கையாளர் ஒரு ஸ்கூட்டருக்கு தன் சொந்த பாக்கெட்டில் இருந்து ரூ.25,000 வரை எக்ஸ்ட்ராவாக எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.

Ola S1

அதாவது – ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக நீங்கள் எக்ஸ்ட்ரா தரும் விலைக்கு, சுமார் 3 ஆண்டுகள் பெட்ரோலே போட்டுவிடலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. 

‘எல்லாரும் புகையில்லாத எலெக்ட்ரிக்குக்கு மாறுங்க’ என்று அறைகூவல் விடுத்தால் மட்டும் பத்தாது; கொஞ்சம் ஸ்ட்ராட்டஜியை மாற்றுங்கள் அதிகாரிகளே!


from ? ஆட்டோமொபைல் https://ift.tt/oXa2mgL

Post a Comment

0 Comments

o