Hero Mavrick: புல்லட், ஹோண்டா, ஹார்லி பைக் வாங்கப் போறீங்களா? ஹீரோவின் காஸ்ட்லி பைக் இது ஓகேவா?

பெயருக்கு ஏற்ற மாதிரியே டூவீலர் மார்க்கெட்டில் ஹீரோ என்றால் அது ‘ஹீரோ மோட்டோ கார்ப்’தான். சும்மாவா பின்னே… ஒவ்வொரு மாதமும் டாப்–10 லிஸ்ட்டில் ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்தான் முதலிடத்தில் இருக்கும்.

போன 2023–ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூட ஹீரோதான் ஃபர்ஸ்ட். மொத்தம் சுமார் 3,77,000 பைக்குகளை விற்று முதலிடத்தில் இருக்கிறது. 

ஹீரோவின் HF டீலக்ஸ், ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் போன்ற விலை குறைந்த பைக்குகளால்தான் இது சாத்தியம். இப்போது ஹீரோ அடுத்த ப்ரீமியம் செக்மென்ட்டுக்குக் களமிறங்கிவிட்டது. ஏற்கெனவே ஹார்லியுடன் கைகோர்த்து X440 எனும் பைக்கைத் தனது ஷோரூமில் வைத்து வியாபாரம் பார்த்து வருகிறது. இப்போது சொந்தமாகவே ஒரு ப்ரீமியம் பைக்கைக் களமிறக்கி இருக்கிறது ஹீரோ மோட்டோ கார்ப். அதன் பெயர் மாவ்ரிக் 440. (Mavrick 440). கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இந்த பைக்கை லாஞ்ச் செய்துவிட்டது ஹீரோ. 

இதுதான் ஹீரோவின் விலை உயர்ந்த பைக்காக இருக்கப் போகிறது. இதன் விலை எக்ஸ்ஷோரூம் சுமார் 2 லட்சம் இருக்கலாம். 

13.5 Ltr Petrol Tank

நீங்கள் ஒரு ரோட்ஸ்ட்டர் பைக் வாங்கப் போகிறீர்கள் என்றால், ஹீரோவின் மாவ்ரிக் நல்ல சாய்ஸாக இருக்கலாம். Mavrick 440 பைக்கை அடுத்த வாரம் மோட்டார் விகடன் சார்பாக டெஸ்ட் ரைடு பார்க்கக் கிளம்பும் நிலையில், இந்த ரோட்ஸ்ட்டர் பற்றி முக்கியமான சில விஷயங்கள் பார்க்கலாம். 

  • ஹார்லி டேவிட்சனுடன் பார்ட்னர்ஷிப் வைத்துத்தான் இந்த பைக்கை ரெடி செய்திருக்கிறது. ஆம், ஹார்லியின் X440 பைக்கின் அதே ப்ளாட்ஃபார்மில்தான் இந்த பைக்கும் உற்பத்தியாகி இருக்கிறது. ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கட்டுமானத்தில் இது கிண்ணென்று இருந்தாலும், 400 சிசி பைக்குகளின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கான USD (UpSide Down Forks) இதில் மிஸ்ஸிங். இருந்தாலும் இதன் சஸ்பென்ஷன் டிராவல் சுமார் 130 மிமீ இருக்கும் என்பது சிட்டிக்குள் ஓகேவாக இருக்கும். ரொம்ப ஆஃப்ரோடுக்கு நோ சான்ஸ்! பின் பக்கம் சஸ்பென்ஷன் மோனோ ஷாக் இல்லை. ட்வின் ஷாக் ஹைட்ராலிக்தான்.

assist and slipper clutch
  • மொத்தம் 5 கலர்கள் மற்றும் 3 வேரியன்ட்களில் வருகிறது மாவ்ரிக். இதன் அடிப்படை வேரியன்ட்டில் ஸ்போக் வீல்கள்தான் இருக்கும். இது Arctic White எனும் சிங்கிள் கலர் பெயின்ட் ஸ்கீமில்தான் கிடைக்கும். இதன் மிட் வேரியன்ட், Celestial Blue மற்றும் Fearless Red என இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் அலாய் வீல்கள் இருக்கின்றன. இதன் டாப் வேரியன்ட்தான் டாப்; இதில் மெஷின் கட் அலாய் வீல்கள் செம ஸ்டைலாக இருக்கும். Phantom Black and Enigma Black என 2 கலர்களில் இது கிடைக்கிறது. 

  • இது ஒரு க்ளாஸிக் ரோட்ஸ்ட்டர் ஸ்டைல் பைக் என்பதால், இதன் ஹெட்லைட் வட்ட வடிவத்தில் இருக்கும். இண்டிகேட்டர்களும் அப்படியே! ஹீரோவின் டிரேட்மார்க்கான H வடிவ இண்டிகேட்டர்கள் இதில் உண்டு. நீளமான சிங்கிள் பீஸ் சீட், குடும்பஸ்தர்களுக்கானது. ஸ்ப்ளிட் சீட் இருந்தால், இந்த ரோட்ஸ்ட்டருக்கு எடுபடுமா என்று தெரியவில்லை. ஆனால், காதலர்களின் சாய்ஸாக இருந்திருக்கும். இதன் சீட் உயரம் 803 மிமீ. கொஞ்சம் உயரம்தான்.

  • இதில் புளூடூத் கனெக்டிவிட்டி உண்டு. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் எல்லாமே டிஜிட்டல் மயம். இதில் டர்ன் – பை – டர்ன் நேவிகேஷன், மொபைலில் வரும் அழைப்பு மற்றும் மெசேஜ் அலெர்ட்கள் உண்டு. செல்போன் சார்ஜ் போட USB சார்ஜிங் போர்ட் இருக்கிறது. 

க்ளாஸிக் ரோட்ஸ்ட்டர் ஸ்டைல்
  • இதன் ஃப்யூல் டேங்க் கொள்ளளவு 13.5 லிட்டர். இந்த பைக்கின் எடை 2 விதங்களில் இருக்கிறது. ஸ்போக் வீல்தான் எடை அதிகம். 191 கிலோ. இதுவே அலாய் வீல் மாடலின் எடை 187 கிலோ. ஒல்லிப் பிச்சான் பார்ட்டிகள் ஹேண்டில் பண்ணக் கொஞ்சம் கஷ்டம்தான். 

175 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், கொஞ்சம்போல ரோடு இல்லாத ரோடுகளிலும் இந்த ரோட்ஸ்ட்டரை ஓட்டலாம். ஸ்பீடு பிரேக்கரில் தட்ட வாய்ப்பில்லை. பிரேக்குகளைப் பொருத்தவரை இரண்டு பக்கமும் 320/240 மிமீ என டிஸ்க் இருக்கிறது. 

LED HeadLamp
  • இன்ஜினைப் பொருத்தவரை 440 சிசி கொண்ட ஆயில் கூல்டு இன்ஜின் செட்அப். இதன் பவர் 27bhp; டார்க் 36Nm. ஆயில் கூல்டு செட்அப் என்பதால், காலில் சூடு அடித்து ரொம்பவும் படுத்தி எடுக்காது. 

  • இந்த இன்ஜின் சிசிக்கு 6 ஸ்பீடுதான் சரியாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதிலும் உண்டு. கூடவே ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் வசதியும் உண்டு. ஸ்பீடு பிரேக்கர் போன்ற திடீர் தடுமாற்றங்களில் சட்டென வேகத்தைக் குறைக்கும் வேளையில், கியரைக் குறைக்கத் தடுமாறத் தேவையில்லை. இன்ஜினும் முக்காது. 

  • புல்லட், ஹோண்டா ஹைனெஸ், ஹார்லி, ட்ரையம்ப் போன்ற பைக் வாங்குபவர்கள், இந்த மாவ்ரிக் பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட்டு முடிவெடுங்கள். 



from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/okv5eYO

Post a Comment

0 Comments

o