‘புது ஸ்கூட்டர் … அதுவும் எலெக்ட்ரிக் வந்தா சொல்லுங்க’ என்று கேட்டிருந்த நிறையப் பேருக்காக ஒரு குட் நியூஸ்! இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் முக்கியமான 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லாஞ்ச் ஆக இருக்கின்றன. அதில் ஏத்தர் அபெக்ஸ்தான் இப்போது டாக் ஆஃப் தி ஏரியா. இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
முழுக்க முழுக்க டிரான்ஸ்பரன்ட் பாடி பேனல்களுடன் இதை ரெடி செய்திருக்கிறார்கள். வழக்கமாக ஒரு ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்றால், சுமார் 1.80 லட்சம் ரூபாய் ஆன்ரோடு விலையில் எடுத்து வைக்க வேண்டும்.
வரப் போகும் இந்தப் புது அபெக்ஸ்தான், ஏத்தர் நிறுவனத்திலேயே கொஞ்சம் பவர்ஃபுல்லான, ப்ரீமியம் வசதிகள் கொண்ட ஸ்கூட்டராக இருக்கப் போகிறது. ஆம், விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450X ஸ்கூட்டரைவிட பெரிய பேட்டரி, கொஞ்சம் அதிக பவர், சக்தி வாய்ந்த மோட்டார், அதைவிட இன்னும் டிஜிட்டலைஸ்டு வசதிகள் என்று எக்ஸ்ட்ரா ப்ரீமியமாக வரப்போவதால், இதன் விலை 450X ஸ்கூட்டரைவிட நிச்சயம் அதிகமாகவே இருக்கும். அதாவது, ஆன்ரோடு விலையில் சுமார் 2.00 லட்சத்தைத் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முக்கியமான ஸ்பெஷலே– அந்த டிரான்ஸ்பரன்ட்டான பாடி பேனல்கள்தான். உள்ளே இருப்பது அப்படியே அச்சு அசலாகத் தெரியும் வகையில் இதை டிசைன் செய்திருக்கிறார்கள். 450X ஸ்கூட்டரில் இருந்து எக்ஸ்ட்ராவாக கலர்களையும் இதில் சேர்க்க இருக்கிறார்கள். மேலும் சிறப்பு வசதிகளாக டச் ஸ்க்ரீன், நேவிகேஷன், கால் அலெர்ட்கள், ரிவர்ஸ் மோடு போன்றவற்றைத் தாண்டி, இதில் கார்களில் இருப்பதைப்போல் க்ரூஸ் கன்ட்ரோல் இருக்கப் போகிறது என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸோடும் இந்த அபெக்ஸ் வந்தாலும் வரலாம். இப்போதுள்ள ஏத்தர், பிரேக்கிங்கில் பக்காவாக இருக்கிறது. ‘பச்சக் பச்சக்’ என பிடித்த இடத்தில் நின்றாலும், ஏபிஎஸ் பிரேக்ஸ் இல்லாததால் வீல்கள் லாக் ஆகி, கீழே விழும் அபாயம் இருக்கிறது. இந்தப் புது அபெக்ஸில் அந்தக் குறை இருக்காது.
ஏத்தருக்குப் போட்டியாக முக்கியமான பிராண்டாகக் களம் இறங்க இருக்கிறது ஆக்டிவா. ஆக்டிவாவை எலெக்ட்ரிக்கில் பார்ப்பது என்பதே பரவசம்தான். முதலில் ஹோண்டா, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வேறு ஏதாவது புதுப் பெயரில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில்தான் இருந்ததாம். ஆனால், ஆக்டிவாதான் மார்க்கெட்டில் நம்பர் ஒன் ஸ்கூட்டர். அந்தப் பெயரிலேயே இதை விட்டால், ஹைப் இன்னும் ஏறும் என்று ஆக்டிவா நேம் பேட்ச்சிலேயே இதைக் களம் இறக்க இருக்கிறது ஹோண்டா.

பெயர் மட்டுமல்ல; ICE (Internal Combustion Engine) ஆக்டிவா தயாராகும் அதே ப்ளாட்ஃபார்மில்தான் இந்த எலெக்ட்ரிக் ஆக்டிவாவும் தயாராகிறது. எலெக்ட்ரிக்குக்கு ஏற்ப கொஞ்சம் ட்வீக் செய்திருக்கிறார்கள். தனது முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பு இது என்பதால், இதில் நிறைய வசதிகளையும், டிசைனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மெனக்கெடலும் சேர்த்திருக்கிறது ஹோண்டா. இதில் ஃபிக்ஸ்டு பேட்டரி செட்அப் கொடுத்திருக்கிறார்கள். அதாவது, ஒக்கினாவா போன்ற ஸ்கூட்டர்கள்போல் பேட்டரியைத் தனியாக எடுத்து சார்ஜ் போட முடியாது. ஏத்தர், ஓலா போன்று அப்படியே ஸ்கூட்டரோடுதான் சார்ஜ் போட வேண்டும். ஆக்டிவாவின் பேட்டரி, மோட்டார் விவரங்கள் இன்னும் தெரியவில்லை;
ஒரு விஷயம் இதில் தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறது ஹோண்டா. இதில் பெர்ஃபாமன்ஸில் கவனம் செலுத்தப் போவதில்லையாம். அதனால், இதன் டாப் ஸ்பீடு சுமார் 50 – 60 கிமீதான் இருக்கலாம் என்கிறார்கள். ஏத்தர், ஓலா போன்றவை 90 கிமீ ஸ்பீடில் பறக்கும். சிட்டிக்குள் இந்த வேகம் போதும் என்று நினைத்து விட்டதோ ஹோண்டா. அதுவும் சரிதான்; எலெக்ட்ரிக் வாடிக்கையாளர்களுக்கு மைலேஜ் என்று சொல்லக்கூடிய ரேஞ்ச்தானே முக்கியம்! அதனால், இது மற்ற ஸ்கூட்டர்கள் தருவதைவிட எக்ஸ்ட்ரா ரேஞ்ச் தரும்படி இதன் பேட்டரியும் மோட்டாரும் இருக்குமாம்.

மற்றபடி பெட்ரோல் ஆக்டிவாவில் இருக்கும் அண்டர் சீட் ஸ்டோரேஜ் வசதி, டிஜி/அனலாக் கன்சோல், டிரம்/டிஸ்க் பிரேக்ஸ் என்று போதுமான வசதிகள்தான் இருக்கும். ப்ரீமியம் வசதிகள் இருக்குமா என்று தெரியவில்லை. காரணம், இதன் விலையைக் கணிசமாகக் குறைத்து வெளியிட இருக்கிறது ஹோண்டா. அநேகமாக, 1.0 – 1.15 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் வந்தால் ஆக்டிவா, பெட்ரோல் சிப்ளிங் மாதிரியே ஹிட் அடிக்க வாய்ப்பிருக்கிறது. அநேகமாக இந்த மார்ச் மாதத்துக்குள் ஆக்டிவா எலெக்ட்ரிக் லாஞ்ச் ஆகி, மற்ற ஸ்கூட்டர்களுக்கு ஷாக் கொடுக்கலாம்! இந்த லிஸ்ட்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் ST, சுஸூகி பர்க்மேன், ஹீரோ விடா V1 Pro, அப்டேட் செய்யப்பட்ட பஜாஜ் சேட்டக் போன்றவையும் போட்டிக்கு வரலாம்.
ஆக்டிவா எலெக்ட்ரிக் எவ்வளவு ரூபாய் விலைக்குள் வந்தால் நல்லாருக்கும்னு கொஞ்சம் கமென்ட்ல சொல்லுங்களேன்!
from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/Jfv4me2
0 Comments