Motorsports: ஸ்கூல் டிராப் அவுட் முதல் இன்ஜீனியரிங் வரை... எல்லோருக்குமே இங்கே வேலை கிடைக்கும்!

ஒரு ஸ்டார் ஹோட்டல் இருக்கிறது. அந்த ஹோட்டலில் ஆட்டோமொபைல் மெக்கானிக்குகளுக்குப் பெரிதாக வேலை இருக்காது. முழுக்க முழுக்க கேட்டரிங், ஹாஸ்பிடாலிட்டிக்குத்தான் மவுசு.

ஒரு ஐடி கம்பெனி இருக்கிறது. அதில் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் படித்தவர்களுக்குத்தான் அதிக டிமாண்ட் இருக்கும்.

ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் இருக்கிறது. அதில் மெக்கானிக் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜீனியர்களுக்குத்தான் அதிக மதிப்பு உண்டு.

மருத்துவமனையில் மருத்துவம் படித்தால்தான் காலே வைக்க முடியும்.

ஆனால், நீங்கள் ஒரு கேட்டரிங் மாணவராக இருக்கலாம்; விஸ்காம் படித்திருக்கலாம்; மருத்துவத் துறையில் ஓரளவு கில்லியாக இருக்கலாம்; சாஃப்ட்வேர் இன்ஜீனியரிங்கைத் தவிர வேறெதுவும் தெரியாத மாணவராக இருக்கலாம்; மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கில் அவுட்ஸ்டாண்டிங் பெர்ஃபாமராக இருக்கலாம்; அல்லது ஸ்கூல் டிராப்-அவுட்டாக வகுப்பு வெளியே ‛அவுட்-ஸ்டாண்டிங்’ ஸ்டூடண்ட்டாகவும் இருக்கலாம். இப்படி எல்லா ‛கலாம்’களும் எளிதில் நுழைந்து, வேலை வாய்ப்பு பெறும் ஒரு துறை இருக்கிறது. அது என்ன தெரியுமா?

அது ரேஸிங் துறை. இங்கே பைக் ஓட்டத் தெரிந்தவர்கள் மட்டும்தான் ஹீரோ இல்லை. அதற்குப் பின்னால் ‛Behind the Scenes’-ல் வேலை பார்க்கும் அத்தனை பேருமே முக்கியம்.
Formula One

உதாரணத்துக்கு, ஒரு சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள். நடிகர்கள், இயக்குநர், உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டிங், டிரைவிங், கேட்டரிங், சண்டை, நடனம் என்று எத்தனை பேர் ‛Behind the Scenes’-ல் வேலை பார்ப்பார்கள். அதேபோல்தான் ஒரு பைக் ரேஸ் நடந்தால், இத்தனை கோர்ஸ் படித்தவர்களும் அனுபவசாலிகளும் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் ஒரு ரேஸ் ஆர்வலர் என்றால், இருங்காட்டுக்கோட்டைக்கோ கோவை கரி மோட்டார்ஸுக்கோ சென்று பாருங்கள். ரைடர்களைத் தவிர ஏகப்பட்ட பேர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

இங்கே கொடியசைத்து ரேஸைத் துவக்கி வைக்கும் Flag Marshal-களில் ஆரம்பித்து, ரேஸை ஒழுங்குபடுத்தும் டீம் மேனேஜ்மென்ட் துறையினர், பிட்ஸ்டாப்பில் வாகனத்தைச் சரி செய்யும் பிட் க்ரூவினர், விபத்து நடந்தால் சட்டென ஒன்றுமே நடக்காதது போல் ட்ராக்கை ஆக்கும் Intervention Marshals, விபத்து ஆனவர்களுக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள், பைக்குகளை ட்யூன் செய்யும் மெக்கானிக்குகள், கன்ட்ரோல் ரூமில் வேலை பார்க்கும் சாஃப்ட்வேர் இன்ஜீனியர்கள், ஒவ்வொரு லேப்பின் மூலையில் நின்று கேமராவைச் சுமந்து படமெடுக்கும் புகைப்பட நிபுணர்கள், அனைவருக்கும் உணவளிக்கும் கேட்டரிங் மாணவர்கள் வரை - இப்படி நூற்றுக்கணக்கான பேர் பிஸியாக இருப்பார்கள்.

இப்படி ரேஸிங் துறையில் வேலை வாய்ப்புப் பெறுவது எப்படி என்கிற தலைப்பில்தான் - மோட்டார் விகடனும் கோவையில் இயங்கி வரும் CRA Motor Sports-ம் இணைந்து இந்த மாதம் 26, 27 தேதிகளில் ஒரு வொர்க்ஷாப்பை நடத்த இருக்கிறது.
A Holden ZB Commodore touring car
இதன் முக்கிய அம்சமே ரேஸிங் துறையில் சட்டென நுழைந்து, ஒரு வேலை வாய்ப்பைப் பெறுவது எப்படி என்பதுதான். கோவையில் அப்படி நிறைய பேரை, ரேஸர்களை உருவாக்கி வைத்த பெருமை CRA Motor Sports-ன் நிறுவனர், தருணுக்கு உண்டு.

அட, வேலை வாய்ப்பு என்றால், மாணவர்களுக்கு மட்டும்தானா என்றால், இல்லை. ரேஸிங்கில் மட்டுமில்லை; பைக்கில்/பைக் ரைடிங்கில் ஆர்வம் இருக்கும் எல்லோருக்குமே இது சூப்பர் செஷனாகத்தான் இருக்கும். காரணம், ஒரு ரேஸ் எப்படி நடக்கும்; ஒரு ரேஸ் பைக் எப்படி உருவாகும்; ஒரு ரோடு பைக்குக்கும் ரேஸ் பைக்குக்கும் என்ன வித்தியாசம்; அதை எப்படி டிசைன் செய்கிறார்கள்; அட, அதை எப்படி நீங்களே டிசைன் செய்யலாம் என்பதுவரை எல்லாமே செம சுவாரஸ்யமாக இந்த வொர்க்ஷாப் இருக்கப் போகிறது என்பதுதான் ஸ்பெஷல்.

உதாரணத்துக்கு, ஒரு ரேஸ் பைக்கை உற்றுக் கவனத்தீர்கள் என்றால், மெட்டல் பாகங்களே ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். முழுக்க முழுக்க ப்ளாஸ்டிக்ஸ், ஃபைபர்களைக் கொண்டு மெழுகியிருப்பார்கள். காரணம், காற்றைக் கிழித்துக் கொண்டு பறவைபோல் பறக்க அதுதானே சரியாக இருக்கும். அதேபோல் ஹெட்லைட், பெட்ரோல் ஆன்/ஆஃப் பட்டன், பில்லியன் சீட் என எதுவுமே இருக்காது. இதெல்லாம் எதுக்கு?

ஏபிஎஸ் பிரேக்ஸ் இருந்தால் நீங்கள் சாலைகளில் நிம்மதியாக பைக் ஓட்ட உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். ஹைவேஸில் பயணம் செய்ய வேண்டுமானால் இது நம்பிக்கை கொடுக்கும். ஆனால், ரேஸ் ட்ராக்கில் ஏபிஎஸ் பிரேக்ஸ் ஆபத்து. ஏன் தெரியுமா?

A 2020 Formula E car

உங்கள் உயரம் என்ன? உங்கள் எடை என்ன? ஒரு பைக் வாங்கப் போகிறீர்கள்? கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் உள்ள பைக் உங்களுக்கு செட் ஆகுமா? ஒரு பைக்கை எப்படி வாங்க வேண்டும் என்பதில்கூடப் பல சூட்சுமங்கள் இருக்கின்றன.

கையில் புகைப்படக் கருவி இருந்தால் யாரும் கேமராமேன் ஆகலாம்தான். ஆனால், ஒரு நகரும் பொருளை அதன் அழகு குலையாமல் படம் எடுக்க என்ன செய்ய வேண்டும்? இங்கே நகரும் பொருள் என்பது ட்ராக்கில் 130 கிமீ வேகத்தில் பறக்கும் பைக். இதைப் படம் எடுக்க பல ட்ரிக்ஸ் உண்டு. அது என்ன?

உங்கள் குழந்தைக்கு 5 வயதாகிறது. இப்போதிருந்தே ரேஸிங்கில், பைக்கிங்கில் ஆர்வம் இருந்தால்... அவனை/அவளை ஒரு சிறந்த ரேஸர் கூட ஆக்கலாம். அது எப்படி?

Online Event

இப்படி எல்லாவற்றுக்கும் இந்த ஜூன் மாதம் 26 - 27 தேதிகளில் நடக்கும் இந்த வொர்க்ஷாப்பில் பதில் இருக்கிறது. அதாவது - என்டர்டெய்ன்மென்ட், எக்ஸைட்மென்ட், வேலை வாய்ப்பு என அனைத்துக்கும் ஆல் கேரன்ட்டி உண்டு இந்த வொர்க்ஷாப்பில்!

Date: 26 & 27 June 2021

Time: 8.00 am to 10.00 am

To register, visit: http://bit.ly/MV_CRA_Racing



from Automobile https://ift.tt/3xPuWaF

Post a Comment

0 Comments

o