Ola: `ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதீங்க!' தீப்பிடிக்கும் ஸ்கூட்டர்கள்; ஓலாவின் அட்வைஸ்!

கடந்த ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட டஜனுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவது எலெக்ட்ரிக் டூவீலர்கள் மீத அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்குக் காரணமாக - கடுமையான வெயில், சார்ஜிங் சேவையில் ஏற்படும் பிரச்னைகள், ஷார்ட் சர்க்யூட் தொழில்நுட்பக் கோளாறு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விளக்கம் அளித்து வருகிறது. பேட்டரி வடிவமைப்புக் குறைபாடுகளால் மட்டுமே ஏறக்குறைய அனைத்து விபத்துகளும் நிகழ்ந்துள்ளன என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புனேவில் தீ பிடித்த ஓலா ஸ்கூட்டர்

அதுமட்டுமின்றி 'சில எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனம் முறையான R&D எக்ஸ்பெர்ட்கள் இல்லாமல், சும்மா ‘ஏனோ தானோ’ என வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வாடிக்கையாளர்களின் உயிரை வைத்து சோதனை நடத்தி வருகிறது' என்று வாடிக்கையாளர்கள், எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் புனேவில் 'Ola S1 Pro' ஸ்கூட்டர் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அந்தக் ஸ்கூட்டரில் பயணித்தவர் காயங்களின்றி உயிர் தப்பினார். தீயணைப்புத் துறையினரும் விரைந்து செயல்பட்டு அசாம்பாவிதங்களைத் தவிர்த்தனர்.

இதுதொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருக்கும் பலர் தயாரிப்பு நிறுவனங்கள் மீது இன்னும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் தீவிபத்து குறித்து விளக்கமளித்துள்ள ஓலா நிறுவனம், "புனேவில் எங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்தது பற்றிக் கேள்விப்பட்டோம். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் விபத்தான அந்த ஸ்கூட்டரில் வேறு நிறுவனங்களின் உதிரிபாகங்கள் (Aftermarket) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரில் ஷார்ட் சர்க்யூட்டில் பிரச்னைகளை உண்டாக்கி தீ விபத்திற்குக் காரணமாகவிட்டது என்று தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, எங்களின் ஆய்வில் ஸ்கூட்டரின் பேட்டரியில் சேதமில்லை, இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

எங்களின் ஓலா நிறுவனம் பாதுகாப்புக்கும், தரத்துக்கும் முக்கியத்துவம் அளித்து எலெக்ட்ரிக் வாகங்களைத் தயாரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் அருகே இருக்கும் ஓலா நிறுவத்தின் கடைகளைத் தொடர்புகொண்டு ஒரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்!" என்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது ஓலா நிறுவனம்.



from ஆட்டோமொபைல் https://ift.tt/OdreL3x

Post a Comment

0 Comments

o