சில நாட்களுக்கு முன்பிருந்தே, பெங்களூருவில் இப்படி அடிக்கடி ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு கார்… பார்ப்பதற்கு கான்செப்ட் கார் போலவே இருக்கிறது. அல்லது இப்படியும் சொல்லலாம்; வீடியோ கேம்களில் வருவதுபோல ஒரு டைப்பாக, சதுரமாக இருக்கிறது அந்த கார்.
ஆனால், அந்தக் காரை ஓட்டுவது…. தேடிப் பார்த்தால் டிரைவர் சீட்டில் யாருமே இல்லை!
ஆளே இல்லாமல் ஒரு கார் சாலையில் ஓடினால்… உங்களுக்கு ‘பக்’ என்று இருக்கும்தானே! லேட்டஸ்ட்டாக அந்த டிரைவரே இல்லாத கார் தானாக சாலைகளில் ஓடிக் கொண்டிருக்க, அதை வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டார் அனிருத் சங்கர் என்பவர். சட்டென 40,000 வியூஸ்களைக் கடந்து வைரலாகி விட்டது அந்த வீடியோ. பேய் கார், மாயாஜாலக் கார், Indian Cyber Truck என்றெல்லாம் கமென்ட்கள் வந்து குவிய ஆரம்பித்து விட்டன அந்த டிரைவர்லெஸ் காருக்கு. ஆம், அது ஒரு அட்டானமஸ் கார்.

டிரைவர்லெஸ் அல்லது அட்டானமஸ் கார் என்றாலே நமக்குச் சட்டென டெஸ்லாதானே நினைவுக்கு வரும். டெஸ்லாவுக்கு இணையாக இப்படி ஒரு அசத்தலான முயற்சி, நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள ‘மைனஸ் ஜீரோ’ (Minus Zero) என்றொரு AI (Artificial Intelligence) ஸ்டார்ட்–அப் நிறுவனம்தான் இந்த காரை முன்னெடுத்து சோதனை செய்து வருகிறது. இந்த காரின் பெயர் zPod. இந்த மைனஸ் ஜீரோ நிறுவனம், அடாஸ் (Advanced Driver Assistance System) தொழில்நுட்பத்தில் ஃபெமிலியரான நிறுவனம்.
பொதுவாக, நம் நாட்டில் ADAS என்பது லெவல்–2 அளவில்தான் இருக்கிறது. அதாவது – நீங்கள் கார் ஓட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்; எமர்ஜென்ஸி நேரங்களில் கார் தானாக பிரேக் பிடிக்கும்; தானாக லேன் சேஞ்ச் ஆகிக் கொள்ளும்; பிளைண்ட் ஸ்பாட்டை அலெர்ட் செய்யும், தானாக ரிவர்ஸ் எடுக்க உதவும். ஆனால் டிரைவர் என்ற ஒருவர் கார் சீட்டில் இருக்க வேண்டும். இந்த அளவில்தான் லெவல்–2 வேலை செய்யும். நம் ஊரில் எம்ஜி கிளாஸ்டர், எம்ஜி ஆஸ்ட்டர், கியா செல்ட்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், ஹோண்டா சிட்டி, மஹிந்திரா XUV 700, டாடா ஹேரியர், மெர்சிடீஸ் பென்ஸ் EQS போன்ற சில கார்களைச் சொல்லலாம்.
On the streets of Bengaluru. @peakbengaluru pic.twitter.com/VtahXpa6Mh
— anirudh ravishankar (@anrdh89) July 22, 2023

ஆனால், இந்த zPod கார், லெவல்–5 அளவில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறதாம். ரேடார் மற்றும் வெல் எக்யூப்டு கேமராக்கள் துணை கொண்டு இயங்கும் இது, டிராஃபிக்குக்கு ஏற்றாற்போல் – காரைத் திருப்புவது, லேன் சேஞ்ச் செய்து கொள்வது, தானாக பிரேக் பிடிப்பது, சொல்கிற இடத்தில் பார்க் செய்து கொள்வது, மழை/வெயிலுக்கு ஏற்ப டிரைவிங்கை அட்ஜஸ்ட் செய்து கொண்டு கேமரா சென்சார்களை மாற்றிக் கொள்வது என்று பலவித அட்ஜஸ்ட்மென்ட்களைத் தானே செய்து கொள்ளும். இதிலுள்ள AI சிஸ்டம், இந்த டிரைவிங் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்.
இதில் இன்பில்ட் செய்யப்பட்ட 6 கேமராக்கள் துணை கொண்டு, அந்த டேட்டாக்களைப் பயன்படுத்தி இது வேலை செய்யும். இந்த காரில் 4 பேர் அமரலாம். வழக்கமான கார்களைப்போல் இதில் சீட்கள் இருக்காது. எதிரெதிரே அமரும்படியான தனித்துவமான சீட்கள் இதில் இருக்குமாம். அதேபோல், இதில் நார்மல் கார்களில் இருப்பதைப்போன்ற லே–அவுட், டேஷ்போர்டு, வழக்கமான கன்ட்ரோல்கள் போன்றவையும் மிஸ்ஸிங். அட முக்கியமான விஷயம் – இதில் ஸ்டீயரிங் வீலே இருக்காதாம் மக்களே! அதற்குப் பதிலாக ஹை ரெசொல்யூஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் இந்த கார் திசை திரும்புமாம்.

‘இப்போ எதுக்கு இந்த டெஸ்ட்டிங்’ என்று தோன்றலாம். அதுவும் டிராஃபிக் நிறைந்த பெங்களூரு மாதிரியான நகரங்களில் இதன் சோதனை ஓட்டம் நடக்கிறது என்றால், இது கமர்ஷியலாக மார்க்கெட்டுக்கு வருமோ என்றால்…. அதற்கான பதில் இப்போது இல்லை என்கிறது மைனஸ் ஜீரோ. இதை லிமிட்டெட் எடிஷனாக வெளியிட்டு, ஆரம்பகட்ட சோதனைகளில் ஈடுபடுத்த இருக்கிறார்களாம். அதைத் தாண்டி மற்ற கார் உற்பத்தியாளர்களுக்கு அடாஸ் லெவல் தொழில்நுட்பத்தை ஷேர் செய்து உதவ இருக்கிறதாம் மைனஸ் ஜீரோ.
போற போக்கைப் பார்த்தா டிரைவர்களுக்கு வேலை இல்லாமல் ஆகிடும் போல!
from ஆட்டோமொபைல் https://ift.tt/4CbIgZN
0 Comments