DHONI: வின்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டிச் சென்ற தோனி! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு எந்தளவிற்கு கிரிக்கெட் மீது நாட்டம் இருக்கிறதோ அந்தளவிற்கு பைக் மற்றும் கார்கள் மீதும் அதிக  நாட்டம் இருக்கிறது.

அவரது கேராஜில் எண்ணற்ற பைக்குகளும், கார்களும் அணிவகுத்து நிற்கின்றன. சமீபத்தில் தோனியின் பைக், கார் கலெக்ஷன்களைப் பார்த்து ஆச்சரியமடைந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத், அதனை வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் பயங்கர வைரலானது.

தோனியின் பைக் கலெக்ஷன்

ஹெல்கேட், நிஞ்சா, யமஹா, சுசுகி சுகன், டிவிஎஸ் அப்பாச்சி போன்ற நூற்றுக்கணக்கான பைக்குகளை வைத்திருக்கும் தோனி, ஹம்மர் எச் 2, மிட்சுபிஷி பஜேரோ, போர்ஷே பாக்ஸ்டர், ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஆடி கியூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சிவர் வ்ரைத் 2 (Rolls-Royce Silver Wraith) வின்டேஜ் கார் எனப் பல கார்களையும் வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தோனிக்கு மிகவும் பிடித்த கார்களில் ஒன்று வின்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் என்றும் கூறப்படுகிறது.

Rolls Royce

1980களில் அறிமுகமான இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை தோனி 2021-ல் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் தோனி தனது வின்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரை ராஞ்சியில் உள்ள தெருக்களில் ஓட்டிச் செல்வதை ரசிகர் ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



from ஆட்டோமொபைல் https://ift.tt/6ecdri3

Post a Comment

0 Comments

o