எலான் மஸ்கின் எலெக்ட்ரிக் கார் விற்பனை நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆண்டுக்கு 5 லட்சம் எலக்ட்ரானிக் வாகனங்களின் யூனிட்கள் திறன் கொண்ட தொழிற்சாலையை, இந்தியாவில் அமைக்க, அது திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு காரின் விலை சராசரியாக 20 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் சந்தித்திருந்த எலான், `உண்மையில் மோடி இந்தியா மீது அக்கறை கொண்டுள்ளார். ஏனெனில் அவர் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்யத் தூண்டுகிறார்; இது நாங்கள் செய்ய உத்தேசித்த ஒன்று தான். நாங்கள் சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறோம். டெஸ்லா விரைவில் இந்தியாவில் இருக்கும்" என்று ஜூன் 21 அன்று எலான் மஸ்க் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்திய அரசு அதிகாரிகளிடம், வரிச்சலுகை போன்ற விஷயங்களை டெஸ்லா ஆலோசித்துள்ளதாக பேசப்படுகிறது.
from ? ஆட்டோமொபைல் https://ift.tt/QPnIWD9
0 Comments