கடந்த ஜூன் மாதமும் சரி, நடப்பு ஜூலை மாதமும் சரி - நம் காலண்டர் நிரம்பி வழியும் அளவுக்கு ஏராளமான புதிய கார்/பைக் அறிமுகங்கள் வரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இந்த ஜூலை மாதத்தை எடுத்துக் கொண்டால், கியா செல்ட்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், மாருதி இன்விக்டோ, ஹூண்டாய் எக்ஸ்ட்டர், ஹோண்டா எலிவேட், C3 ஏர்க்ராஸ் மற்றும் ட்ரையம்ப் என்று ஏராளமான டெஸ்ட் டிரைவ்களும் நடக்க இருக்கின்றன. இதைத் தாண்டி டொயோட்டா இனோவா ஹைக்ராஸைப் போலவே மாருதி `என்கேஜ்’ என்ற பெயரில் ஒரு புதிய எம்பிவியை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், கடந்த மே மாத விற்பனையை எடுத்துக் கொண்டால், இரு மார்க்கெட்டும் இரண்டு இலக்க வளர்ச்சியைக் கண்டிருப்பது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் கார்-பைக் வாங்குகிறார்கள் என்பதைத் தெளிவாக்குகிறது. குறிப்பாக, கார்களைப் பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால், கடந்த மே மாதத்தில் 3,34,247 கார்கள் தொழிற்சாலைகளில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதாவது இது 13 சதவிகித வளர்ச்சி. இருசக்கர வாகனங்கள் என்று பார்த்தால் ஏறக்குறைய 15 லட்சம் வாகனங்கள் விற்பனை நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றன. இந்த விற்பனை பெரும்பாலும் கிராமப்புறங்களில் நடந்திருப்பது மேலும் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது.
ஆனால், வளர்ச்சிக்கு இன்னும் அதிக வாய்ப்பு இருக்கிறது. காரணம், இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டால், 2016 - 17-ம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருந்தது. வரும் பண்டிகைக் காலங்களில் இன்னும் ஏராளமான புதிய கார் மற்றும் பைக்குகள் விற்பனைக்கு வரயிருக்கின்றன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் விற்பனையும் சரி, வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் தேர்வுகளும் சரி - போட்டி போடக் கூடிய விலையில் நிச்சயம் கிடைக்கும்.
நன்றி!
- ஆசிரியர்
from ? ஆட்டோமொபைல் https://ift.tt/kfCL5hK
0 Comments