கரர: உளளரல சல வதமறலல ஈடபடட வகனததகக தரபரவல இரபபவரகக அபரதம!

கரூர் மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், முறையற்ற வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும் கரூர் மாவட்டப் போக்குவரத்துத் துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும், வேகமாக வாகனங்களை இயக்குபவர்களையும் கண்டறிய ஏதுவாக, புதுப்புது டெக்னாலஜிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
ட்விட்டர் பதிவு

அந்த வகையில், கரூர் மாநகரத்தில் உள்ள பேருந்து நிலைய ரவுண்டானா, சர்ச் கார்னர், திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா உள்ளிட்ட முக்கியச் சந்திப்புகளில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தானியங்கிக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமாகப் போக்குவரத்துக் காவல்துறையினர் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு எதிராக வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு, கரூர் சர்ச் கார்னர் பகுதியில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் பதிவு எண்ணுக்கு அனுப்ப வேண்டிய அபராதத்திற்குப் பதிலாக, வேறொரு வாகனத்தின் உரிமையாளருக்குத் தவறாக அபராதம் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கான குறுஞ்செய்தியும், கரூர் மாவட்டப் போக்குவரத்துக் காவல்துறையினரால் அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நபர், 'நான் அவன் இல்லை' பாணியில், 'அந்த கார் எண் என்னுடையது அல்ல' என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டிருப்பது, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, TN 47 AC 8673 என்ற பதிவு எண் கொண்ட வாகன உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய அந்த அபராதம் குறித்த குறுஞ்செய்தியை, தவறாக திரிபுரா மாநிலம், அகர்தலாவில் இருக்கும் சோமன் என்ற நபருக்கு அனுப்பபட்டுள்ளதாகத் தெரிகிறது.

அபராதம் குறித்த குறுஞ்செய்தி

அந்தக் குறுஞ்செய்தியில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதற்கான விபரமும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்குத் தவறாக அனுப்பப்பட்டுள்ள அபராதம் குறித்த அந்தக் குறுஞ்செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து, 'அந்த கார் எண் என்னுடையது அல்ல' என அந்த நபர் புகார் அளித்துள்ளார்.

இதுபோன்று சென்னையிலும் சில இடங்களில் தவறுதலாக அபராதச் சீட்டு பறப்பதாகவும் வாகன ஓட்டிகள் புகார் கூறுகிறார்கள். மக்களே! உங்களுக்கு ஏதும் இப்படி அனுபவம் நடந்திருக்கா?


from Automobile https://ift.tt/A813h5l

Post a Comment

0 Comments

o