நிமிடத்துக்குப் பல நூறு கார்கள் தயாரிப்பது மட்டுமில்லை; மாதத்துக்குப் பல ஆயிரம் கார்களை விற்பது மட்டுமில்லை; ஆண்டுக்குப் பல லட்சம் கார்களை ஏற்றுமதி செய்வது மட்டுமில்லை – ஹூண்டாய்க்கு இன்னொரு முகமும் உண்டு. அது, சாலைப் பாதுகாப்பு!
இந்தச் சாலைப் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் ஹூண்டாய்க்கு அதிகப்படியான அக்கறையும் ஆர்வமும் உண்டு. சென்னையில் சில கோடிகள் செலவில் ATPR கேமராக்கள் பொருத்துவதற்குக்கூட ஹூண்டாய் உதவி செய்திருப்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இதைத் தாண்டி கடந்த 5 ஆண்டுகளாக ஹூண்டாய் சாலைப் பாதுகாப்புக்கென ஒரு கேம்பெய்ன் நடத்தி வருவது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் கூகுளில் #BetheBetterGuy என்று டைப் செய்தால், ஹூண்டாய்தான் முந்திக் கொண்டு வருகிறது. ஆம், இந்த ஹேஷ்டேக்கில் சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறது ஹூண்டாய்.
‘சீட் பெல்ட் போடுங்க; ஹெல்மெட்டை மாட்டுங்க; குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க; டிராஃபிக் ரூல்ஸை மதியுங்கள்’ என்று சும்மா சொல்வதோடு மட்டுமல்லாமல், அது களத்திலும் இறங்கியிருக்கிறது. சாலைப் பாதுகாப்பு மட்டுமில்லை; நாட்டில் எந்த மாற்றமாக இருந்தாலும், இளைஞர்கள் நினைத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறது ஹூண்டாய். அதன் முன்முயற்சியாக, ‘Young India, It’s time to Buckle-up’ எனும் தலைப்பில், இளைஞர்களுக்குப் புரியும் மொழியில் ஒரு பரப்புரை முழக்கத்தையும் அது ஏற்பாடு செய்து நாடு முழுவதும் பரப்பிக் கொண்டு வருகிறது.
சீட்பெல்ட் மாட்டாமல் கார் ஓட்டுவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, சட்ட விதிகளை மீறுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது – இதெல்லாம் மட்டும் பெரிய குற்றங்கள் இல்லை; இதில் ஹூண்டாய் முக்கியமாக ஒரு விஷயத்தை வலியுறுத்துவது என்னவென்றால், பாதசாரிகள் நின்றால் அவர்களைக் கடக்கவிடாமல் செய்வதும் மிகப்பெரிய குற்றம் என்கிறது. அவசர ஊர்திகள் மற்றும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதில் நம் மனிதநேயம் தெரியும் என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறார்கள் ஹூண்டாய் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தினர். சாலையை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும்; அது நம் வாகன ஓட்டிகள் கையில்தான் இருக்கிறது என்பதையும் இந்த #BetheBetterGuy ஹேஷ்டேக் மூலம் வலியுறுத்தி வருகிறது ஹூண்டாய்.
‘‘ஜென் z மற்றும் மில்லினியல் மக்களுக்கு, சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டை பெரியளவில் முன்னேற்றிச் செல்லும் என்பதை உணர வைப்பதுதான் எங்கள் இலக்கு!’’ என்கிறார், HMIL-ன் Asst. Vice President ஆனந்த். மேலும், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் முக்கியமான டாஸ்க் – இந்த ஆண்டுக்குள் சுமார் 40 கோடி வாகன ஓட்டுநர்களை இதன் மூலம் BetterGuy-களாக மாற்ற வேண்டும் என்பதுதானாம்.
நீங்கள்கூட முடிந்தால் சாலையில் ஏதாவது நல்லது செய்துவிட்டு, #BetheBetterGuy ஹேஷ்டேக்கைப் பிரபலப்படுத்தலாம்.
from Automobile https://ift.tt/2dmCTct
0 Comments