சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மென்பொருள் சேவை நிறுவனமான (SaaS) Kissflow அதன் ஐந்து மூத்த நிர்வாகிகளுக்கு தலா ₹ 1 கோடி மதிப்புள்ள BMW சொகுசு கார்களை பரிசாக வழங்கியது. இந்த நிலையில் சென்னையில் உள்ள மற்றொரு ஐடி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு அவர்களின் உழைப்பை பாராட்டி கார் பரிசளித்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்நிறுவனத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரு Ideas2IT, என்ற ஐடி நிறுவனத்தில் சுமார் 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 10 ஆண்டுகளாக பணிபுரியும் 100 ஊழியர்களை தேர்வு செய்து அவர்களின் உழைப்பை பாராட்டி தலா ஒரு மாருதி சுசூகி காரை பரிசாக வழங்கி உள்ளது.
இதுகுறித்து Ideas2IT நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான முரளி விவேகானந்தன் கூறுகையில், `நாங்கள் எங்கள் இலக்கினை அடைந்தால், எங்கள் செல்வத்தை பகிர்ந்துகொள்வோம் என்று ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊழியர்களுக்கு உறுதி அளித்திருந்தோம். ஊழியர்கள் நிறுவனத்தை மேம்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் நிறுவனம் வளர்ச்சி கண்டது எனவே, நிறுவனம் அவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கவில்லை, அவர்கள் தங்கள் கடின உழைப்பால் இதை சம்பாதித்துள்ளனர். கார்களை வழங்கியது முதல்படிதான்' என்று கூறியிருக்கிறார்.
பரிசினை பெற்ற 100 ஊழியர்களில் ஒருவரான பிரசாத் கூறும்போது, ``நிறுவனத்திடமிருந்து பரிசுகள் பெறுவது பெரிய விஷயம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனம் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்க நாணயங்கள், ஐபோன்கள் போன்ற பரிசுகளை அளித்து ஊழியர்களை உற்சாகப்படுத்துகிறது. கார் பரிசு என்பது எங்களுக்கு மிகவும் பெரிய விஷயம்" என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.
from Automobile https://ift.tt/HRCkU8z
0 Comments