மஹிந்திரா கார்களை எடுத்துக் கொண்டால், ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். மஹிந்திராவில் தார் ஜீப்பைத் தவிர, எல்லா கார்களுமே`O’ வில்தான் முடியும். ஸ்கார்ப்பியோ, பொலேரோ, மராத்ஸோ, வெரிட்டோ, எக்ஸ்யூவி 500 (இதை, 5 டபுள் ஓ என்றுதான் உச்சரிக்க வேண்டும்). அதேமாதிரி, லேட்டஸ்ட்டாக அறிமுகம் ஆகும் கார்கள் எல்லாமே `Q’–வில் முடியும்படி ஒரு க்யூட் ட்ரெண்டைக் கடைப்பிடித்து வருகிறது ஸ்கோடா. கோடியாக் (Kodiaq), கரோக் (Karoq), காமிக் (Kamiq).... அந்த வரிசையில் புதிதாக குஷாக் (Kushaq) என்றொரு மிட்சைஸ் எஸ்யூவியைக் களமிறக்க இருக்கிறது ஸ்கோடா.
குஷாக் என்றால், சமஸ்கிருதத்தில் பேரரசர் என்று அர்த்தம். கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட Vision-In எனும் கான்செப்ட் கார் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால்… அட என்பீர்கள். அந்த Vision-In கான்செப்ட்டுக்குத்தான் குஷாக் எனும் பெயர் சூட்டி இன்று விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஸ்கோடா.
ஓகே! குஷாக்கில் ப்ளஸ் அதிகமா… மைனஸ் அதிகமா?

* பொதுவாகவே ஸ்கோடா கார்கள் தரமான பில்டு குவாலிட்டிக்கு பெயர் பெற்றவை. இந்த குஷாக்கும் அப்படித்தான். தரமான கட்டுமானத்துக்குப் பெயர் பெற்ற MQB A0 - IN ப்ளாட்ஃபார்மில் தயாராகி இருக்கிறது குஷாக். இதனால் பாறை போன்ற கட்டுமானம் உறுதி!
* மற்ற ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார்களைப்போலவே குஷாக்கின் டிரைவிங் டைனமிக்ஸும் மிகச்சரியாக இருக்கிறது. 140 கிமீ வேகத்துக்கு மேல் பறந்தாலும், ஆடாமல் அசையாமல் ஸ்டேபிளாக இருக்கிறது குஷாக்.
* குஷாக்கை செம ஷார்ப்பாக வடிவமைத்திருக்கிறது ஸ்கோடா. பானெட்டில் ஆரம்பித்து பக்கவாட்டுப் பக்கம், பின் பக்கம் என காரைச் சுற்றி ஷார்ப் லைன்கள் இருப்பது, குஷாக்கைக் கொஞ்சம் ஸ்போர்ட்டியாகக் காட்டுகிறது. இதிலுள்ள டூயல் ஹெட்லைட் செட் அப் எல்லோருக்கும் பிடிக்கும்.


* ஹெட்லைட்டுக்குக் கீழே LED DRL… பூமராங் ஸ்டைலில் Wrap-around டெயில் லைட்ஸ் என எல்லாமே தரம். 17 இன்ச் டைமண்ட் அலாய்வீல்கள், செம கிரிப்பாக இருக்கும். உள்பக்கமும் டச் ஸ்க்ரீனில் ஆரம்பித்து, பியானோ பிளாக் இன்டீரியர்வரை எல்லாமே ப்ரீமியம். உள்ளே விலை மலிவான பொருள்கள் எதுவும் தென்படவில்லை.
* இன்ஜினின் பர்ஃபாமென்ஸைவிடவும் காரின் ஸ்பெஷல் ஃபீச்சர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலத்தில் இருக்கிறோம். அதனால் கார் கம்பெனிகளும் தேவையுள்ள, தேவையில்லாத பல வசதிகளையும் கொடுக்கின்றன. குஷாக்கின் டாப் எண்ட் மாடலில் 10 இன்ச் டச் ஸக்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் / ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் பக்க சீட்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன்பக்கம் சென்டர் கன்ஸோலில் இரண்டு C டைப் சார்ஜிங் போர்ட்கள், பின் பக்கம் இரண்டு போர்ட்கள், MySkodaConnect எனும் கனெக்டட் அசிஸ்ட், கார் ட்ராக்கிங் வசதி என்று எக்கச்சக்க வசதிகள் குஷாக்கில் இருக்கின்றன.

* குஷாக்கில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5லி 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்கள் இருக்கின்றன. இரண்டிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். 3 சிலிண்டர் இன்ஜினின் பவர் 115 bhp. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கிறது. இதிலேயே 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் உண்டு. 150bhp பவர் கொண்ட 1.5லிட்டர் இன்ஜினுக்கு 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது. DSG கியர்பாக்ஸ்கள், ஸ்மூத்தான ஷிஃப்ட்டிங்குக்கும், பக்காவான செயல்பாட்டுக்கும் பெயர் பெற்றவை. டிரைவிங் விரும்பிகளுக்கு DSG ரொம்பவும் பிடிக்கும். அதாவது, மேனுவல் - ஆட்டோமேட்டிக், பவர் குறைந்த இன்ஜின் - பவர் அதிகமான இன்ஜின் என எப்படி வேண்டுமானாலும் குஷாக்கை வாங்கிக் கொள்ளலாம். நல்ல மைலேஜுக்கு 115bhp நல்ல ஆப்ஷன்.
* பாதுகாப்பில் ஃபோக்ஸ்வாகன் குழுமத்தைக் குறை சொல்ல முடியாது. 6 காற்றுப் பைகளில் ஆரம்பிக்கிறது குஷாக்கின் பாதுகாப்பு அம்சம். ஏபிஎஸ், EBD (Electronic Braking Distribution), ட்ராக்ஷன் கன்ட்ரோல், ESC (Electronic Stability Control), கார் உருளாமல் இருக்க ரோல்ஓவர் ப்ரொடக்ஷன், விபத்து நேரங்களில் ஆட்டோமேட்டிக்காக பிரேக்கின் வேகத்தை அதிகப்படுத்தி காரின் வேகம் குறைக்க உதவும் Multi Collision Braking System (MKB), மலை இறக்கங்களில் கார் சரியாமல் இருக்க ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர்களில் காற்றழுத்தம் குறைந்தால் தெரிவிக்கும் டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), பார்க்கிங் சென்ஸார்களுடன் ரியர்வியூ கேமரா, ISOFIX மவுன்ட் சீட்கள், மழை விழுந்தால் தானாக இயங்கும் ரெயின் சென்ஸார் வைப்பர்கள், இருளில் தானாக ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் - என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் குஷாக்கின் ப்ளஸ்.

பலவீனம்!
ரோடு பிரசன்ஸ் இன்னும் வேண்டும்!
17 இன்ச் வீல்கள், பெரிய வீல் ஆர்ச், LED DRL, மேலே ரூஃப் ரெயில் என்று இருந்தாலும் குஷாக்கில் பிரமாண்டமான ரோடு பிரசன்ஸ் மிஸ் ஆகிறது. ஹூண்டாய் க்ரெட்டாவையும் செல்ட்டோஸையும் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தால், குஷாக் சின்ன கார்போல் இருக்கிறது. குறைவான உயரமே இதற்கான காரணம்.
* குஷாக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸும் குறைவு. 188 மிமீ என்பது ஆஃப்ரோடு செய்ய ஏதுவானதாக இருக்குமா தெரியவில்லை. க்ரெட்டாவைவிட 2 மிமீதான் குறைவு என்றாலும், ஸ்கோடா போன்ற எஸ்யூவிகளுக்கு 200 மிமீ நிச்சயம் வேண்டும்.


* குஷாக்கின் வீல்பேஸ் 2,651 மிமீ. செல்ட்டோஸ், க்ரெட்டாவைவிட 41 மிமீ அதிகம் என்றாலும், உயரம் குறைவான கார் என்பதால், 6 அடி உயரமானவர்களுக்குத் தலை கூரையில் இடிக்கலாம்.
* குஷாக், ஒரு ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார். எஸ்யூவி பிரியர்கள், 4 வீல் டிரைவை மிகவும் விரும்புவார்கள். டஸ்ட்டரை இதில் பாராட்டலாம்.

* பாதுகாப்பில் பல அம்சங்களை அள்ளித் தெளித்த ஸ்கோடா, முக்கியமான பின் பக்க டிஸ்க் பிரேக்கைத் தரவில்லை. டாப் எண்டான Style-லிலாவது டிஸ்க்கை ஆப்ஷனலாக கொடுத்திருக்கலாம்.
* குஷாக்கில் இருப்பது வெறும் பெட்ரோல் இன்ஜின்கள் மட்டும்தான். டீசல் இன்ஜின் கிடையாது. குஷாக்கில் மட்டுமில்லை; இனி ஸ்கோடாவில் டீசலுக்கே இடம் இல்லை என்கிறார்கள்!
* குஷாக்கில் பின்பக்கம் பொருட்கள் வைக்க 385 லிட்டர் இடம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற போட்டியாளர்கள் இதைவிட அதிகம். க்ரெட்டா/செல்ட்டோஸ் - 433 லிட்டர். எம்ஜி ஹெக்டர் - 587 லிட்டர். ரெனோ டஸ்ட்டர் 475 லிட்டர்.

முக்கியமான சில வசதிகள் மிஸ்ஸிங்
ஒரு ப்ரீமியமான எஸ்யூவியில் பவர்டு டிரைவர் சீட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிரைவ் மற்றும் ட்ராக்ஷன் மோடுகள் இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
விலைதான் மைனஸா?
பொதுவாக, ஸ்கோடா கார்கள் விலை அதிகமாகவே இருக்கும். காரணம், பாகங்களை இம்போர்ட் செய்து பொருத்துவதுதான். குஷாக் 95% உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட கார்; அது போக, இந்த இரண்டு இன்ஜின்களுமே ஸ்கோடாவில் உள்ள சக்கான் தொழிற்சாலையில்தான் தயாராகின்றன.
அப்படி இருந்தும் இதன் விலையில் கரிசனம் காட்டவில்லையோ என்று தோன்றுகிறது ஸ்கோடா. Active, Ambition, Style என மூன்று வேரியன்ட்களில், 5 கலர்களில் வெளியாகி இருக்கிறது. 10.50 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் Active மாடலின் விலை ஆரம்பித்து, 12.80; 14.20; 14.60; 15.80; 16.20; 17.60 லட்சம் என முடிகிறது குஷாக். இது ஆன்ரோட்டுக்கு வரும்போது சுமார் 13 லட்சத்தில் ஆரம்பித்து டாப் மாடல் Style Automatic சுமார் 21 லட்சம் வரை போகலாம்.

குஷாக் வாங்குபவர்களுக்கு…
பெரிய பெர்ஃபாமன்ஸெல்லாம் தேவையில்லை; விலை குறைவாக இருக்க வேண்டும்; நல்ல மைலேஜ் வேண்டும் என்பவர்கள் - 1 லிட்டர் 3 சிலிண்டர் Active, Ambition வேரியன்ட்டுக்குப் போய்விடலாம். ஆனால், இதில் மேலே சொன்ன வசதிகளில் சிலவற்றை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும். எல்லா வசதிகளும் உள்ள Style வேரியன்ட், ஆன்ரோடு விலை சுமார் 17 லட்சம் வந்துவிடும். இத்தனை லட்சத்துக்கு 1 லிட்டர் இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் உங்களுக்குப் போதுமா?
சுமாரான பெர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் உற்சாகம் வேண்டும் என்பவர்கள், 1 லிட்டர் ஆட்டோமேட்டிக்குக்குப் போய்விடலாம். இதில் ஆவரேஜான மைலேஜ் உறுதி. பெர்ஃபாமன்ஸ் தெறியாக விரும்புபவர்கள், டார்க் கன்வெர்ட்டரைவிட 1.5 லிட்டர் DSG கியர்பாக்ஸுக்குப் போகலாம். இதிலேயே மேனுவல் விரும்பிகள் பேடில் ஷிஃப்ட்டரைப் பயன்படுத்தி டிரைவிங்கை இன்னும் ஜாலியாக்கலாம்.
from Automobile https://ift.tt/2TgD9WN
0 Comments