70’ஸ் - 80’ஸ் கிட்ஸுக்கு பள்ளிப் பாடத்தில் ஓவியத்துக்கு என்று ஒரு வகுப்பு உண்டு. செம ஜாலியான வகுப்பு அது. நினைத்ததை வரையலாம்; பிடித்த கலரைப் பூசலாம். கணிதத்தில் சென்ட்டம் அடிப்பதைவிட டிராயிங்கில் 10/10 மதிப்பெண் வாங்கினால் செம ஹேப்பியாக இருக்கும். அடுத்த டிராயிங் க்ளாஸ் எப்போடா வரும் என்று இருக்கும்.

அப்படி ரஃப் நோட்டில் ரஃப்பாக வரைந்து, இன்று பல வெளிநாட்டு கார் டிசைனர்களுக்கு டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருப்பவர்தான் சத்தியசீலன். ‛கார் டிசைன் என்றாலே இத்தாலிதான்’ என்பதை இந்திய ஆட்டோமொபைலில் மாற்றியவர் சத்தியசீலன். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர். நீங்கள் சாலையில் பார்க்கும் பல நிஸான் கார்கள், டாடா கார்கள், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பஸ்கள், லாரிகள், ட்ரக்குகள், டிவிஎஸ் நிறுவனத்தின் ‛கிங்’ ஆட்டோ என எல்லோமே சத்தீயசீலனின் கை வண்ணத்தில் வந்தவை.
நாம் பயன்படுத்தும் எல்லா வாகனங்களும் ஓர் உயிருடன், ஓர் உணர்வுடன், நமது கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும். இது கேட்பதற்குக் கொஞ்சம் புரியாததுபோல் இருந்தாலும், உண்மை இதுதான். ஒரு அப்பாச்சி பைக்கைப் பாருங்கள்… சுறா மீனின் இன்ஸ்பிரேஷன் இது. கியா காரின் பம்பரைப் பாருங்கள்; புலியின் மூக்குபோல் இருக்கும். ஆடி காரின் இண்டிகேட்டரைக் கவனியுங்கள்; அருவிபோலவே விழுந்து விழுந்து எரியும். ஹூண்டாய் காரின் LED DRL -யைக் கவனியுங்கள்; பூமராங் போலவே இருக்கும். இப்படி கார் டிசைனுக்கு பூ முதல் பூமராங் வரை எல்லாவற்றையுமே இன்ஸ்பிரேஷனாக எடுத்துத்தான் ஆட்டோமொபைல் டிசைனர்கள் வாகனங்களை வடிவமைக்கிறார்கள்.

To Register, Click here: http://bit.ly/CarDesign_May21
கார் டிசைன் என்றாலே இந்தியர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நினைப்பதற்குக் காரணம், நம் இந்திய மாணவர்களிடம் டிசைன் துறையைப் பற்றிய ஆர்வம் உள்ள அளவுக்கு வழிகாட்டுதல் இல்லை என்பதுதான். அதற்கான மிகச் சரியான தீர்வைச் சொல்ல இருக்கிறார் சத்தியசீலன்.
இது சம்பந்தமான வொர்க்ஷாப்தான் நாளை (மே 22-23) நடக்க இருக்கிறது. வளவளவெனப் பேசி போர் அடித்து விடுவது மாதிரியான வொர்க்ஷாப் இல்லை இது. ஒரு பேப்பரில் பென்சிலைக் கொண்டு கோடு போடுவதில் ஆரம்பித்து, ஒரு ஃபோர்டு கார் வரைவது வரையான உங்களின் ஓவியத் திறமையை வெளிக்கொணரும் வொர்க்ஷாப் இது என்பதுதான் இதன் ஸ்பெஷல். அதுவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக!
ஒரு காரை எந்தவிதமான பேப்பரில், எப்படிப்பட்ட ஸ்கெட்ச்களில் வரையலாம் என்பதில் ஆரம்பித்து, அதை களிமண்ணில் உருவாக்கி, அதற்கென உள்ள இலியாஸ் எனும் சாஃப்ட்வேரில் அதை டெவலெப் செய்து, பின்பு கான்செப்ட் காராக மாற்றி, அதை சாலையில் ஓட விடுவது வரை என்னவெல்லாம் சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும் என்பதை விளக்குவதுதான் இந்த வொர்க்ஷாப்.

To Register, Click here: http://bit.ly/CarDesign_May21
ஆனால், இந்த வொர்க்ஷாப்பின் நோக்கம் அதுவல்ல; கார் டிசைனில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கப் போகிறது. எங்கே படித்தால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும்; எந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் இதன் ஃபைனல் ஷெட்யூல் ஆக இருக்கும்.
அப்படி இந்த வொர்க்ஷாப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்போது ஜெர்மனி, இத்தாலி என்று பல நாடுகளில் படித்துக் கொண்டும் பணிபுரிந்தும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஸ்பெஷல். கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஷரோன் ராமலிங்கம், எம்ஜி நிறுவனத்துக்கு ஸ்டைஃபண்ட் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்திருக்கிறார், ஆடி டிசைனரிடம் உதவியாளராக இருந்திருக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்!

மாணவர்களுக்கு கார் டிசைனுக்கு என தனி கோர்ஸும் உண்டு; எந்த கோர்ஸ் படிக்க வேண்டும்; எந்த இன்ஸ்டிட்யூட்டில் படிக்க வேண்டும்; எங்கே படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுவரை எல்லாமே இந்த வொர்க்ஷாப்பில் ஐடியா கிடைக்கும்.
கார் ஆர்வலர்களுக்கு இது என்ஜாய்மென்ட்; கல்லூரி மாணவர்களுக்கு இது கைடன்ஸ்!
2 Days Online Car Design Workshop in English
Date: 22nd, 23rd May 2021
To Register, Click here: http://bit.ly/CarDesign_May21
from Automobile https://ift.tt/2QANNpO
0 Comments