‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா இப்போது செம ஹேப்பியாக இருக்கிறார். இப்போதுதான் 39–வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். லேட்டஸ்ட் ரிலீஸான ‘ஜவான்’ படம் பாலிவுட்டிலும் பல ரசிகர்களைப் பெற்றுத் தந்ததோடு, 1000 கோடி பாக்ஸ் ஆபீஸிலும் இடம் பிடித்திருக்கிறது. அது தவிர, இந்த வாரம் அவரின் அடுத்த படம் ரிலீஸ். ஆம், ‘அன்னபூரணி’ நயன்தாராவுக்கு 75–வது படம். சினிமாத்துறையில் ஒரு ஹீரோயின் இப்படிச் சாதிப்பதெல்லாம் சாத்தியமான விஷயமில்லை; ஆனால், அது நயன்தாராவுக்கு இல்லை. ‘‘100 படம் நடிக்காமல் விடமாட்டேன்’’ என்று எப்போதோ சொல்லியிருந்தார் நயன்தாரா. அதன்படி ‘டெஸ்ட்’ மற்றும் ‘மண்ணாங்கட்டி Since 1960’ என்று வெரைட்டியான ஜானரிலும் படங்கள் வரிசையாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

தாரா ஹேப்பியாக இருப்பதற்கு இன்னொரு லேட்டஸ்ட் காரணம் – கணவர் விக்னேஷ் சிவனின் அன்புப் பரிசு. கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கு மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் கார் மாடலைப் பரிசளித்திருக்கிறார் இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன். பொதுவாக, நயன்தான் நண்பர்களுக்கும் பிடித்தவர்களுக்கும் இதுபோன்று காஸ்ட்லி பரிசுகளைப் பரிசளிப்பது வழக்கம். ஆனால், இப்போது நயன்தாராவுக்கே இது வியப்பூட்டும் விஷயம். தனது இன்ஸ்டா வலைதளத்தில், ‘Welcome Home You Beauty, My Dear Husband, Thank you for the sweetest B’day Gift’ என்று தனது காரின் லோகோ புகைப்படத்தைப் பதிவிட்டு வைரல் ஆக்கியிருக்கிறார் நயன்தாரா.
ஏற்கெனவே நயன்தாராவின் கராஜில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடீஸ் பென்ஸ் GLS, போர்டு எண்டேவர், டொயோட்டா இனோவா என்று சில கார்கள் வீற்றிருக்கின்றன. இப்போது அந்த லைன்அப்பில் மேபேக்கும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
பென்ஸ் மேபேக் காரின் லோகோவைத் தனது கைவிரல்களால் இதயம் வடிவில் படம் எடுத்து அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 6 லட்சம் லைக்குகளையும் ஆயிரக்கணக்கில் கமென்ட்களையும் பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்தப் பதிவு. ‘என்ன, இதுதான் பென்ஸ் லோகோவா’... ‘மேபேக்னா பென்ஸ் காரா’ என்று பலர் கமென்ட்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.


ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரா மாடல் சொகுசு கார் லைன்அப்பில்தான் இந்த மேபேக் (Maybach) வரும். இது ஒரு லிமோசின் டைப் கார். அதாவது, 5.4 மீட்டருக்குச் சும்மா ஆலப்புழா படகுபோல் இருக்கும், சொகுசில் குறை சொல்ல முடியாத ஒரு லக்ஸூரி பெர்ஃபாமன்ஸ் கார். பெரிய அரசியல்வாதிகள், அதிபர்களின் தேர்வு இந்த மேபேக் சீரிஸாகத்தான் இருக்கும். அட, நம்ம பிரதமர் மோடி இந்த பென்ஸ் மேபேக் லிமோசின் கார்தான் வைத்திருக்கிறார் என்பது ஸ்பெஷல். ஆனால், புல்லட் புரூஃப் பேக்கேஜோடு அந்த காரின் விலை 12 கோடிப்பே!

Maybach சீரிஸ் மொத்தம் 2 மாடல்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. Maybach S Class மற்றும் Maybach GLS என இந்த மாடல்களும் வெவ்வேறு வகை ஜானரைக் கொண்டவை. இதில் எஸ் க்ளாஸ் என்பது ஒரு செடான் சொகுசு கார். பிரதமர்கள், அதிபர்களின் சாய்ஸ் இதுதான். இன்னொரு மாடலான GLS என்பது எஸ்யூவி டைப். இதில் எந்த மாடல் நயன்தாராவுக்குப் பரிசாகக் கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.
பென்ஸின் சாதாரண S க்ளாஸ் இருக்கிறதே… சாதாரணம் என்றால், அப்படி இல்லை; ரெகுலர் மாடல் S க்ளாஸ்… இதுவே ஒரு அல்ட்ரா மாடல் சொகுசு கார். S க்ளாஸின் விலையே 1.75 கோடிக்கு மேல். அதன் காஸ்ட்லி மற்றும் பெர்ஃபாமன்ஸ் வெர்ஷன்தான் Maybach S சீரிஸ். இது 2.69 கோடி எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து ஆரம்பிக்கிறது. இது ஆன்ரோடு விலைக்கு வரும்போது சுமார் 3 கோடியைத் தொட்டுவிடும். இதிலேயே Maybach GLS மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 2.96 லட்சம் வருகிறது. இது GLS எனும் ரெகுலர் எஸ்யூவியின் காஸ்ட்லி வெர்ஷன். இதுவும் நயன்தாராவிடம் இருக்கிறது. இந்த GLS Maybach-ன் ஆன்ரோடு சுமார் 3.25 கோடி வரும்.

இந்த இரண்டு பென்ஸ்களுமே ஒரு சாஃபர் டிரைவன் (Chauffeur Driven) கார். அதாவது, டிரைவர்களை ஓட்ட வைத்து, பின்னால் உட்கார்ந்து மீட்டிங் போட்டுப் பேசிக்கொண்டோ, ஜம்முனு உறங்கிக் கொண்டோ பயணிக்கக் கூடிய லிமோசின் வகை கார். இதில் Chauffeur Package என்றே ஒரு பேக்கேஜ்கூட இருக்கிறது. இதில் எல்லாேமே எலெக்ட்ரானிக் ஆப்பரேட்டட்தான். சீட்களை / ஹெட்ரெஸ்ட்களை அட்ஜஸ்ட் செய்வது, மசாஜ் செய்வது, Foldout ஃபுட்ரெஸ்ட் கொண்ட கேரவன் டைப் செமி ஸ்லீப்பர் சீட்களுக்கு வென்டிலேட்டட் ஆப்ஷனை அட்ஜஸ்ட் செய்வது என்று எல்லாமே ஒன் டச் பட்டன்தான். இதில் முன் பக்க டிரைவர் சீட்டையோ, கோ–டிரைவர் சீட்டையோ ‘கொஞ்சம் முன்னாடி தள்ளிக்கோங்க’ என்று ரிக்வொஸ்ட் பண்ணத் தேவையில்லை. பின்னால் இருந்தபடியே நீங்களே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
பென்ஸில் MBUX என்றொரு அசிஸ்டன்ஸ் தொழில்நுட்பம் இருக்கிறது. இதன் மூலம் வாய்ஸ் மூலமாகவே காரை ஸ்டார்ட் செய்வது, ஏசியைக் குறைப்பது, விண்டோவை மூடுவது என்று பல விஷயங்களைச் செய்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள கீலெஸ் என்ட்ரி கொண்ட FLush Door Handles–ல்கூட ஒரு டெக்னாலஜிதான். இது கார் மூவ் ஆனதும் அப்படியே காரோடு ஒட்டிக்கொண்டு, காரின் ஏரோ டைனமிக்கைக் குலைக்காத வகையில் டிசைன் செய்திருப்பார்கள். இது டோரில் அப்படியே Retract ஆவது செம ஸ்டைலாக இருக்கும்.

பின் பக்கம் எல்லாமே டெய்லர் மேடு தையல் வேலைப்பாடுகள் கொண்ட கம்பார்ட்மென்ட். இதற்குப் பெயர் பிசினஸ் க்ளாஸ் சென்டர் கன்சோல். இதில் முன் பக்க சீட்டின் பின்பக்கம் டிவி மானிட்டர்கள் வைத்திருப்பார்கள். பென்ஸில் ஆம்பியன்ட் செட்டிங்தான் கலக்கலாக இருக்கும். இரவு நேர எஃபெக்ட், ஃபாரஸ்ட் எஃபெக்ட், கேண்டில் லைட் மூடு என்று விரும்புகிற ஆம்பியன்ட் செட்டிங்கில் பயணிக்கலாம். இந்த ரியர் சென்டர் கன்சோலில், காரின் ஓனர்களுக்கு சில்வர் கோட்டிங் செய்யப்பட்ட Goblets என்று சொல்லக்கூடிய சாம்பெய்ன் கிளாஸ்களும் இருக்கும். இதிலும் காரின் சொகுசைப் பற்றிச் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது.
இந்த சாம்பெய்ன் பாட்டில்களை அதற்கான ஹோல்டர்களில் வைத்துவிட்டு, தண்ணீரை ஓரளவு நிரப்பி வைத்துவிட்டுப் பயணம் செய்தால்கூட, கீழே சிந்தாதாம். அந்தளவு ஆடாமல், அசையாமல் இதன் ஏர் சஸ்பென்ஷன் சொகுசாக இருக்குமாம்.
Maybach GLS சீரிஸ் மாடல், ஒரு எஸ்யூவி டைப். இதுவும் சும்மா இல்லை. கிண்ணென்ற கட்டுமானமும், சொகுசும் வேற லெவல். இதன் பீட்சீட்டில் அமர்ந்து வானத்தையே வேடிக்கை பார்த்துக் கொண்டு வரலாம். அந்தளவு விசாலம். இந்த மேபேக் கார்களின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஏரியாவை – யாரும் டேஷ்போர்டு என்று சொல்லிக் கேட்டதில்லை. பென்ஸே இதை ‘காக்பிட்’ என்றுதான் குறிப்பிடுகிறது. விமானத்தில்தான் டேஷ்போர்டைத்தான் ‘காக்பிட்’ என்பார்கள்.

மேபேக் கார்கள் சொகுசுக்கு மட்டுமில்லை; பெர்ஃபாமன்ஸும் வெறித்தனம் காட்டும். அதனால்தான் இதை பென்ஸ் AMG லைன்அப்பில் சேர்த்திருக்கிறது. இதன் பவர் 557bhp மற்றும் டார்க் 730Nm. 4.9 விநாடிகளில் இது 0–100 கிமீ–யைத் தொடும்.
இந்த Maybach GLS, S மேபேக்கைவிட ஆன்ரோடில் சுமார் 40 லட்சம் எக்ஸ்ட்ரா வரும். எனக்குத் தெரிந்து பல செலிபிரிட்டிகளின் சாய்ஸ், Maybach GLS ஆக இருப்பதில்லை. Maybach S செடான் ஆகத்தான் இருக்கிறது.
இந்த Maybach S சீரிஸிலேயே S580 4Matic மற்றும் S680 4Matic என இரண்டு வேரியன்ட்கள் இருக்கின்றன. இந்த மேபேக்குகளில் இருப்பது 4.0 லிட்டர்… அதாவது 4,000 சிசி கொண்ட V8 டர்போ பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் 503bhp. டார்க் 700Nm. இது நம் ரெகுலர் கார்களைவிட சுமார் 3 - 4 மடங்கு அதிகம். 0–100 கிமீ வேகத்தை இது 4.3 விநாடிகளில் கடக்கிறது. Maybach S680 மாடலின் பவர் 602bhp. டார்க் 900Nm. இது 0–100 கிமீ–யை ஒரு சில புள்ளி விநாடிகளுக்கு முன் தொடுமாம். எல்லாவற்றிலும் இருப்பது 9 ஸ்பீடு கியர்பாக்ஸ். இவை எல்லாமே ஆல்வீல் டிரைவ் டெக்னாலஜி கொண்டிருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு 250 கிமீ. நயன்தாரா நினைத்தால், சென்னையில் இருந்து பொசுக்கென சில மணி நேரங்களிலேயே கேரளாவுக்குப் போய்விடலாம். ஆனால், அதற்கான ரோடும் நயன்தாராவே போட்டால்தான் உண்டு.

எல்லாம் ஓகே! மைலேஜ் எவ்வளவுங்க வரும் என்கிறீர்களா? 3 கோடி ரூபாய் காருக்கும், பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குற நயன்தாராவுக்கும் மைலேஜெல்லாமா பாஸ் முக்கியம்!
from ஆட்டோமொபைல் https://ift.tt/0YaSzGr
0 Comments