மழைக்காலம் வந்தாலே வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. மழைக்காலத்தில் வாகனம் ஓட்டுவது பரவசமானதாக இருந்தாலும் அதில் பல ஆபத்துக்களும் நிறைந்திருக்கின்றன. மழை நேரங்களில் எப்படி வாகனம் ஓட்ட வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ் இதோ!

*மழையில் எக்காரணம் கொண்டும் மரங்களுக்கு அடியில் வாகனங்களை பார்க் செய்யாதீர்கள். முக்கியமாக, கார்கள். விண்ட்ஷீல்டில் மரக்கிளைகள் விழுந்து கண்ணாடி உடைந்தால்… உள்ளே தண்ணீர் போகும் என்பதைத் தாண்டி, பெரிய செலவு காத்திருக்கிறது.

* பைக்குகளை சைடு ஸ்டாண்ட் போட்டே வைத்திருக்காதீர்கள். வலது பக்க ஹேண்டில்பார் வழியாக மழை நீர் கீழிறங்கி, கார்புரேட்டர் – மழை நீர் சேகரிப்புத் தொட்டியாகி விடும். Fi இன்ஜின் பைக்குகளில், இது ஃப்யூல் டேங்க் ஃப்ளோட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பேட்டரியின் டெர்மினல்களும் நிலைகுலைந்து, சீக்கிரமே ஆயுள் இழக்கும் அபாயமும் உண்டு. ஃவெயில் காலங்களில்கூட, சென்டர் ஸ்டாண்ட்தான் சிறந்த தீர்வு.

* தண்ணீர் இன்ஜினுக்குள் புகுவதை, ‘ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்’ என்று சொல்வார்கள். சைலன்ஸர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீரில் போனால்… நிச்சயம் Hydro Static Lockதான்.

* அப்போ, சைலன்ஸர் மூழ்கும் அளவு தண்ணீரில் போகவே முடியாதா என்றால்… இல்லை. ஆனால், வேண்டாம்.

மழை நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்கான டிப்ஸ்

*வேறு வழியில்லை என்றால்… பல டெக்னிக்குகளைக் கையாள வேண்டும். முதல் கியரிலேயே போக வேண்டும்; 10 – 15 கிமீ–ஐத் தாண்டக்கூடாது; க்ளட்ச்சில் இருந்து காலை எடுத்துவிட வேண்டும்; பிரேக்கில் கால் வைக்கவேகூடாது; கிராஜுவலான ஆக்ஸிலரேஷன் வேண்டும்.

* கார்/பைக் டயர்கள் சாலையில் படாமல் மழை நீரில் வழுக்கிக் கொண்டு போவதை ‘ஹைட்ரோ ப்ளானிங்’ என்பார்கள். ஈரமான சாலைகளில் வாகனங்களை மெதுவாக ஓட்டினால், இந்த ஹைட்ரோ ப்ளானிங் பிரச்னையைத் தவிர்த்து விடலாம். கார் எடை குறைந்ததுபோலவும், ஸ்டீயரிங் லைட்டாகவும் இருந்தால், நீங்கள் தண்ணீரில் மிதக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஃப்ரன்ட் வீல் டிரைவ் காரில் பயணிக்கிறீர்கள் என்றால், எந்தப் பக்கமாக கார் வழுக்கிக் கொண்டு திரும்புகிறதோ, அதே பக்கம் ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி ஆக்ஸிலரேட்டரை மிதமாக ரிலீஸ் செய்ய வேண்டும்.

*இதுவே ரியர் வீல் டிரைவ் கார் என்றால், வழுக்கும் திசைக்கு எதிர்ப்பக்கமாக ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி மிதமான ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஹைட்ரோ ப்ளானிங்கில் இருந்து தப்பித்துவிடலாம். அதேபோல், மழையில் ஹைவே டிரைவிங்கில் கார்களில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி வேண்டாம்!

* ஹைபிரிட் வாகனங்களைப் பொறுத்தவரை – அதுவும் எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி தண்ணீரில் மூழ்காத அளவு பார்த்துக்கொள்வது நல்லது. என்னதான் IP ரேட்டிங் இருந்தாலும்… தண்ணீர் மூழ்கி ஒரு லித்தியம் அயன் பேட்டரி செயலிழந்தால்.. 50,000 ரூபாய்க்கு மேல் செலவு உண்டு.

* மழை நேரங்களில் ஏசி போடாமல் பயணிக்காதீர்கள். முடிந்தவரை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் பயன்படுத்தினால் கம்ப்ரஸருக்கு வேலை மிச்சம்.

* மழையில் விண்ட்ஷீல்டில் பனி படர்ந்து வெளிச்சாலை தெரியாது. இதில் இரவு நேரம் என்றால், ஹை பீம் தொந்தரவுகள் வேறு கண்ணைக் கூசும். டீஃபாகர் உள்ள கார்களில் பிரச்னை இருக்காது. சாதாரண கார்களில் நிறைய பேர் இந்தத் தொந்தரவுக்கு ஆளாவார்கள்.

மழை நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்கான டிப்ஸ்

*ஏர் வென்ட்டுகளை மேல்நோக்கி வைத்துவிட்டு, வெறும் புளோயரை மட்டும் ஓட விட்டு, ‘ஃப்ரெஷ் ஏர்இன்டேக் மோடு’–ஐ ஆன் செய்யுங்கள். பனி சட்டென மறையும்.

* அதேபோல், மழையில் பைக்கில் போகும்போது, ஹெல்மெட்டின் வைஸரிலும் பனிப் பிரச்னை ஏற்படும். வைஸரை ஏற்றிவிட்டே பயணியுங்கள். மழைத்துளிகள் முகத்தில் பட்டால் ஒன்றுமில்லை.

* மழை வெள்ளத்தில் உங்கள் கார் மூழ்கிவிட்டால்… மறந்துபோய்க்கூட ஸ்டார்ட் செய்துவிடாதீர்கள். ஒரு தடவை க்ராங்க் ஆகிவிட்டாலும், கனெக்ட்டிங் ராடு உடைய வாய்ப்புண்டு. கடுமையான மழை நேரங்களில் கார் ஓட்டுகிறீர்கள்; திடீரென உங்கள் கார் ஆஃப் ஆகிவிட்டது. எதனால் ஆஃப் ஆனது என்று தெரிந்துவிட்டால் ஓகே! சம்பந்தமே இல்லாமல் இன்ஜின் ஆஃப் ஆனால்… அதை ஸ்டார்ட் செய்யக்கூட முயற்சிக்காதீர்கள். டோ செய்து சர்வீஸ் சென்டருக்கு விடுவதுதான் நல்லது.

* எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்தான் மழைக்காலத்தில் வாகனங்களின் மிகப் பெரிய எதிரி. உள்ளேயும் சரி; பானெட்டிலும் சரி – வொயர்கள் வெளியே தெரிந்தால் ஆபத்துதான்.

* தண்ணீர் ஏரியாக்களில் காரை ஐடிலிங்கில் விட்டு ஏசியை ஆன் செய்து நீண்ட நேரம் இருப்பது தவறு.

* மழை முடிந்து பைக்கை எடுக்கும்போது, செயின் ஸ்ப்ரே நிச்சயம் அடித்து விடுங்கள். கார்டு இல்லாத ஓப்பன் செயின் ஸ்ப்ராக்கெட் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இது நிச்சயம் தேவை. இல்லையென்றால், கரகர சத்தம் எரிச்சலைக் கிளப்பும்.

மழை நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்கான டிப்ஸ்

* மழை முடிந்து காரை எடுக்கும்போதும் கவனம்; பிரேக்குகளைக் கவனியுங்கள். மழை நேரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பிரேக்குகள்தான். பிரேக் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் பிரேக் ஷூ தேய்ந்து தூசாக மாறி, பிரேக் டிரம்மிலேயே தங்கிவிடும். மழை நீர் சேரும்போது, பேஸ்ட் போல மாறிவிடும். டிஸ்க் என்றால் இன்னும் சிக்கல். கேலிப்பர் மற்றும் பிரேக் பேடுகளில் லேயர் உருவாகி விடும். இதில் பிரேக் ஃபெயிலியர் ஆக வாய்ப்பு அதிகம்.

* மழை நீர்தான் விண்ட்ஷீல்டைச் சுத்தப்படுத்திடுச்சே என்று வைப்பரை ஆன் செய்யாதீர்கள். நல்ல துணி கொண்டு துடைத்துவிட்டு, பிறகு ஆன் செய்யுங்கள்.

* இன்ஷூரன்ஸ் பற்றி பலர் அக்கறை எடுப்பதே இல்லை. இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, `Engine Protect’ எனும் Add-on பாலிஸியைப் பற்றி விசாரியுங்கள். நிறைய பேருக்கு இது தெரிவதில்லை. எக்ஸ்ட்ரா ப்ரீமியமாக இருந்தாலும், இது எந்த நேரத்திலும் கைகொடுக்கும்.



from ஆட்டோமொபைல் https://ift.tt/tLa2Nu4