நம் ஊரில் ஆட்டோ எக்ஸ்போ நடக்குமே… அதேபோல், இத்தாலியில் நடக்கும் EICMA என்றொரு மோட்டார் ஷோ, உலகப்புகழ் பெற்ற கார்/பைக் கண்காட்சி. அதில்தான் 2018–ல் முதன்முதலாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் SG650 என்றொரு பைக்கைக் காட்சிப்படுத்தி இருந்தது.
Custom Made Painting Scheme

SG என்றால், ShotGun என்று பொருள். அப்போதிருந்தே ‘ஷாட்கன் எப்போ வரும்’ என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. பைக் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தபோதே நமக்கு ஸ்பை ஷாட்டெல்லாம் ஹாட்டாகக் கிடைத்தது. இப்போது லேட்டஸ்ட்டாக கோவாவில் நடந்த மோட்டோவெர்ஸ் எனும் பைக் திருவிழாவில் இந்த ஷாட்கன் 650 பைக்கைக் காட்சிப்படுத்தி, விலையையும் அறிவித்துவிட்டது ராயல் என்ஃபீல்டு. 4.25 லட்சம் எனும் அறிமுக எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கும் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் பற்றி ஒரு ஷார்ட் நியூஸ்.

  • ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பிளாட்ஃபார்மில் வந்திருக்கும் 4–வது பைக் இந்த ஷாட்கன். ஏற்கெனவே இன்டர்செப்டர், கான்ட்டினென்ட்டல் 650 ஜிடி, சூப்பர் மீட்டியார் போன்றவை இருக்கின்றன. இந்த லைன்அப்பின் அடுத்த பைக் இது. 

  • இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக், ஒரு கஸ்டம் மேடு பைக். அதாவது எல்லாமே கைகளால் மேனுவலாக வரையப்பட்டு, ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட ஹேண்ட்மேடு பைக். நீலம், கறுப்பு மற்றும் Neon Yellow என செம ஃபேன்ஸியாக, சூப்பர் ஹாட் தீமில் இருந்தது ஹாட்கன். 

  • புல்லட் 350 பைக்கில் ஒரு Pin Stripes இருக்கும்; இதை ஒரு பெர்சனலைஸ்டு டச் ஆகக் கொடுத்திருந்தது ராயல் என்ஃபீல்டு. அதேமாதிரி ஒரு பெர்சனலைசேஷன்தான் இந்த ஷாட்கன்னுக்கும். 

Pea Shooter Exhaust
  • RE-ல் சூப்பர் மீட்டியார் 650 என்றொரு க்ரூஸர் பைக் தெரியும்தானே… அதைப்போல்தான் இதை வடிவமைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு க்ரூஸர் பைக்தான். ஆனால், பின் சீட்டைக் காணவில்லை.  அப்படியென்றால், இது ஜாவா, யெஸ்டி போன்ற பாபர் ஸ்டைல் பைக்கா என்றால், ஆம்! அதுவும்தான். சிங்கிள் சீட்டுக்கு எதுக்கு பாஸ் நாலே கால் லட்சம் என்றால், அப்படி இல்லை. பில்லியன் சீட் ஆப்ஷன் கொடுக்கிறது RE. வேண்டுமென்றால், இதை 4 போல்ட்டுகள் மூலம் கழற்றிக் கொள்ளலாம். 

  • சூப்பர் மீட்டியாரை ஓட்டும்போது கால்களைப் பின்னோக்கி வைக்கும்படி இதன் ஃபுட்பெக்ஸ் இருக்கும். க்ரூஸர் பைக்குகளில் இதுதான் எர்கானமிக்ஸ்; இதை Forward Set Ergonomics என்று சொல்வார்கள். ஷாட்கன்னில் கொஞ்சம் நடுவாக வைத்திருக்கிறார்கள். அதாவது, நியூட்ரலாக இருக்கும். மேலும் ஹேண்டில்பாரும் ஃப்ளாட்டாக, சீட்களும் தாழ்வாக இருப்பதால், நீண்ட தூர ரைடிங்குக்கு சூப்பர் மீட்டியாரைவிட செமையாக இருக்கும். 

  • ஹேண்ட்பார்களின் ஓரத்தில் சைடு வியூ மிரர்கள் இருக்கின்றன. இதை Bar End Mirrors என்று சொல்வார்கள். இது பாபர் ஸ்டைலுக்கு உரித்தது. 

  • ஸ்விட்ச் கியர்கள், வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், மற்ற லைட்டிங் சமாச்சாரங்கள், அட்ஜஸ்டபிள் லீவர்கள் போன்றவை மீட்டியார் 650–யை இன்ஸ்பயர் செய்து வடிவமைத்திருந்தாலும், நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன. பெரிய பெட்ரோல் டேங்க், ஸ்டைலான கறுப்பு அலாய் வீல்கள், ஹெட்லாம்ப்பை மூடியிருக்கும் கவுல் போன்றவை வித்தியாசம். 

Single Seat
  • இந்த பைக்கில் இருக்கும் சைலன்ஸர்… அதாவது எக்ஸாஸ்ட்டுக்குப் பெயர் Pea - Shooter Exhaust. இந்தப் பெயரில் ஒரு 2D கேம் இருக்கிறது. ஏற்கெனவே ராயல் என்ஃபீல்டில் இந்த எக்ஸாஸ்ட்தான் ஃபெமிலியரான சைலன்ஸர். இதன் ‘டப் டுப்’ பீட் காதைக் கிழிக்காது; மைல்டாக இருக்கும். 

  • இன்ஜினைப் பொருத்தவரை இதுவும் சூப்பர் மீட்டியார் 650–ல் இருக்கும் அதே ட்வின் சிலிண்டர் செட்அப்தான். மற்றபடி இதன் டெக்னிக்கல் விவரங்களை இன்னும் சொல்லவில்லை ராயல் என்ஃபீல்டு. இந்த 648 சிசியின் பவர் மற்றும் டார்க் விவரங்கள் தெரியவில்லை. இருந்தாலும், அதே 47bhp மற்றும் 52Nm டார்க்கை வெளிப்படுத்தலாம். இதில் இருப்பது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். 

  • இதில் கேடிஎம் பைக்குகளில் இருப்பதைப் போல் ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் வசதியுடன் வருகிறது. இந்த க்ளட்ச்சின் லீவர் இத்தனை பெரிய பைக்கை ஓட்டுவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. செம ஈஸியாக ஆப்பரேட் செய்ய முடியும். சிட்டிக்குள் ஓட்டுவதற்கும் செம கம்ஃபர்ட் ஆக இருக்கும். ஹார்டான பிரேக்கிங்கின்போது ஏற்படும் அதிகப்படியான இன்ஜின் ரெவ்வையும் குறைக்கும் இந்த வகையான க்ளட்ச் வசதி. சடர்ன் பிரேக்கிங்கில் திடீரென பதற்றமாகி கியரைக் குறைக்கத் தாமதாகும் பட்சத்தில், ஒரு முக்கு முக்கும்தானே! இது அப்படி இருக்காது. 

பில்லியன் சீட்டை, போல்ட் மூலம் கழற்றிக் கொள்ளலாம்!
Console
  • மொத்தமே 25 பைக்குகள்தான் விற்பனைக்கு ரெடியாகி இருக்கிறது ஷாட்கன். அதுவும் ரூ.4.25 லட்சம் என்பது அறிமுக விலைதான். அதாவது கோவாவின் மோட்டோவெர்ஸ் திருவிழாவில் கலந்து கொண்ட  25 லக்கி வின்னர்களுக்கு மட்டும்தான் இந்த விலை. அநேகமாக, ஒரு 5 லட்சம் ஆன்ரோடு விலைக்கு, பொங்கல் தாண்டி இந்த ஷாட்கன், ‘டப் டுப்’ என சாலைகளில் வெடிக்கலாம். 



from ஆட்டோமொபைல் https://ift.tt/Gbk3IEl