இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் காரின் முதன் உரிமையாளராக மாறியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாஷ்யம் பில்டர்ஸ் உரிமையாளர் யுவராஜ். அம்பானி மிஸ் செய்த அந்த 10.5 கோடி ரூபாய் ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் எனும் எலெக்ட்ரிக் காரில் என்ன ஸ்பெஷல் எனப் பார்க்கலாம்!

ஸ்பெக்டர், ஒரு 2 டோர் எலெக்ட்ரிக் லக்ஸூரி லிமோசின் கூபே காராக வந்திருக்கிறது. ஸ்பெக்டர் அல்லது ஸ்பெக்ட்ரே (Spectre) என்றால், பேய் என்று அர்த்தம். ஆனால், இதை வேறு மாதிரி அர்த்தங்களிலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாதிரியான ஒளிரும் தன்மை, நிழல் இப்படியும் சொல்லலாம். புரியுறது மாதிரி சொல்லணும்னா, சட்டென அமானுஷ்யமான உருவம் ஒன்று வெளிச்சக் கீற்றுகளில் தெரிந்தால் எப்படி இருக்கும். அதுதான் ஸ்பெக்டர். (Ghost, Phantom, Spectre - இப்படிப் பேய்ப் பேராதான் காருக்கு வைப்பீங்களா ரோல்ஸ்ராய்ஸ்!)
பெயருக்கு ஏற்றபடியே ஏகப்பட்ட இலுமினேட்டர்கள் காரின் உள்ளே/வெளியே இருக்கின்றன. கிரில்லில் இருந்து ஆரம்பித்து, உள்ளே காரின் பேசஞ்ஜர் சீட் வரை இந்த இலுமினேட்டர்கள் இயங்குவது, அந்த ஸ்பெக்டர் உருவத்தைப்போல் ஜிகுஜிகுக்கும். இது கார் ஐடிலிங்கில் இருந்தால் மட்டும்தான். இரவு நேரங்களில் இந்த ரோல்ஸ்ராய்ஸ் கிரில்லின் இலுமினேஷன் இன்னும் வேற லெவலில் இருக்கும். ஏற்கெனவே ரோல்ஸ்ராய்ஸில் பேன்ட்டம் என்றொரு கார் இருக்கிறது. அதைத் தழுவித்தான் இந்த எலெக்ட்ரிக் கார் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பேன்ட்டம் காரைவிட ஏகப்பட்ட ஸ்பெஷல் ஃப்யூச்சர்களுடன் வந்திருக்கிறது ஸ்பெக்டர்.

இந்த 2 டோர் கூபேவில் இருப்பது 23 இன்ச் வீல்கள். படகு என்றால் செமிக்கும் போங்கள். இந்த காரின் நீளம் 5.45 மீட்டர். இதன் அகலமே 2 மீட்டர். இது பென்ஸ் EQS காரைவிட நீளம். சாலையில் இது போனால் படகு ஒன்று மிதப்பதுபோல் இருக்கும். இது வெளியே இருப்பவர்களுக்கு மட்டுமில்லை; உள்ளே இருப்பவர்களுக்கும்தான்!

இதன் ஏர் அடாப்டிவ் சஸ்பென்ஷன் செட்அப் அப்படி. சும்மா ஜிவ்வென்று ஏறி இறங்கும் இந்த செட்அப் வேற லெவலில் இருக்கும். இதைக் கப்பலில் போவது மாதிரி இருக்கும் என்று சொல்கிறது ரோல்ஸ்ராய்ஸ். சாரி ரோல்ஸ்ராய்ஸ்! அந்த எல்இடி ஹெட்லைட்ஸ், பல மீட்டர் தூத்துக்கு வெளிச்சத்தைப் பீய்ச்சியடிக்கும். இதன் எல்இடி டிஆர்எல்–ம் செம பவர்ஃபுல்.
3D எஃபெக்ட்டில் 23 இன்ச் வீல்களுடன் வந்திருக்கும் முதல் ரோல்ஸ்ராய்ஸ் கார் இதுதான். ரோல்ஸ்ராய்ஸில் Wraith என்றொரு கார் இருக்கிறது. ஸ்பெக்டரின் பின்பக்கத்தைப் பார்த்தால் ரெய்த் போலவேதான் தோற்றமளிக்கிறது. இந்த ஸ்பெக்டர், ரோல்ஸ்ராய்ஸின் ஆல்–அலுமினியம் ஸ்பேஸ் ஃப்ரேம் எனும் கட்டுமானத்தில் ரெடியாகிறது. ஏற்கெனவே பேன்ட்டம், கல்லினன், கோஸ்ட் போன்ற பல வகை மாடல்களும் இந்த பிளாட்ஃபார்மில்தான் ரெடியாகின்றன. காரின் எடையைக் குறைப்பதற்காகப் பல்வேறு லைட் வெயிட் மெட்டீரியல்களைபப் பயன்படுத்தித் தயாரித்திருக்கிறார்கள்.


இந்தக் கார் மற்ற ரோல்ஸ்ராய்ஸ் கார்களைவிட 30% ஸ்டிஃப் ஆகவும், சொகுசாகவும் இருக்குமாம். இதில் அந்த ஆக்டிவ் சஸ்பென்ஷன் எனும் வசதியும், 4 வீல்களையும் ஆப்பரேட் செய்யும் ஸ்டீயரிங் சிஸ்டம் கொண்ட தொழில்நுட்பமும்தான் செம மாஸாக இருக்கப் போகிறது.
அதேபோல் ஏரோ டைனமிக்கிலும் வெறித்தன வேலை பார்த்திருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ். காற்றைக் கிழித்துக் கொண்டு போகும் ஒரு காருக்கு, அதன் டிராக் ஃபோர்ஸ்தான் மிக முக்கியம். இந்த அளவை Co-Efficient Drag என்பார்கள். இந்த அளவு குறையக் குறையத்தான் ஸ்டெபிலிட்டி கிடைக்கும். அதற்கு காரின் டைனமிக்ஸில் நல்ல வேலை பார்ப்பார்கள் கார் டிசைனர்கள். அப்படி இந்த ஸ்பெக்டர் காரின் Co-Efficient Drag ஃபோர்ஸின் அளவு வெறும் 0.25cdதான். 0.30cd–க்கு உள்ளே இருக்கும் எந்தக் காருமே நிலைத்தன்மையில் பெஸ்ட்டாக இருக்கும். அதனால் ஸ்பெக்டர் ஓடாது; ஆடாமல் பறக்கும்!
இந்த Spectre காரின் இன்டீரியர் நிச்சயம் பேசப்படும். புதிய சாஃப்ட்வேர் பிளாட்ஃபார்மில் டிசைன் செய்யப்படும் இதற்குப் பெயர் Spirit. கனெக்டட் கார் வசதி கொண்ட புது டிஜிட்டல் இன்டர்ஃபேஸ் தொழில்நுட்பம் மூலம், காரின் எல்லா கன்ட்ரோல்களையும் கட்டுப்படுத்தும் அற்புதமான வசதியை வழங்குகிறது ரோல்ஸ்ராய்ஸ். இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டிஜிட்டல் மயம். இதன் டிரைவர் சீட்டில் அமர்ந்தால் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்திருப்பதுபோன்ற ஒரு ஃபீலிங் வரும். டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட ஸ்ப்ரிட் ப்ளாட்ஃபார்ம் வேற லெவல் செய்கிறது.

வெறித்தரமான தரம், மேம்படுத்தப்பட்ட லெதர், மர வேலைப்பாடுகள் என்று மற்ற RR கார்களில் இல்லாத சிறப்பம்சங்களுடன் இதை ரெடி செய்திருக்கிறார்கள். முக்கியமாக, செக்மென்ட்டின் முதலாக அந்த Starlight Doors… செம கூல் ஃப்யூச்சர். இந்தக் கதவுகளில் 4,500–க்கும் மேற்பட்ட ஒளி நட்சத்திரங்கள் (Lighted Stars) ஏதோ விண்வெளியில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருமாம். அட, இதன் டேஷ்போர்டும் இலுமினேட்டட்தான் போங்கள்! வெளிப்பக்கம் என்ன நடக்கிறது; மேடு பள்ளத்தில் கார் தடதடக்கிறது; வெளிப்பக்க இரைச்சல் போன்ற எதுவும் கேட்காத அளவு இதன் NVH லெவலும் பக்காவாக இருக்கும். ‘அப்போ வெளியில யாராச்சும் ஹார்ன் அடிச்சு ஓவர்டேக் பண்ணா கேட்காதா’னு குசும்பா கேட்கப்புடாது! அதேபோல், காரின் ரூஃப் ஏரியாவிலும் ஸ்டார்லைட்கள் மினுமினுக்கின்றன. இதுவும் வான்வெளியில் பயணிப்பதைப் போன்ற ஃபீல் கிடைப்பதற்காகவாம்!
ஸ்பெக்டரின் முக்கியமான பேசுபொருளே இதன் எலெக்ட்ரிக் மோட்டார்தான். இதில் பிஎம்டபிள்யூ eDrive எனும் மோட்டார்… அதுவும் ட்வின் மோட்டார்களுடன் வந்திருக்கிறது. இதன் பவர் எவ்வளவு தெரியுமா? 593bhp மற்றும் 900Nm டார்க். இது ஒரு இனோவா காரைவிட சுமார் 3 மடங்கு அதிகம். இது 0–100 கிமீ வேகத்தை வெறும் 4.5 விநாடிகளில் கடக்கும்.

இந்தக் காரில் இருக்கும் பேட்டரிதான் செம கெத்து! 120kWh சக்தி கொண்ட பேட்டரி பேக் இதில் இருக்கிறது. வேறெந்த காரிலும் இத்தனை பெரிய பேட்டரி பேக் இல்லை. பென்ஸ் EQS காரில் இருப்பது 108.4kWh பேட்டரி. அதனால் சிங்கிள் சார்ஜுக்கு WLTP (Worldwide Harmonized Light Vehicles Test Procedure) சோதனையின்படி இதன் ரேஞ்ச் 500 கிமீ என்கிறார்கள். அப்படியென்றால் ரியல் டைமில் இது சுமார் 420 – 450 கிமீ தரலாம். பத்தரைக் கோடிக்கு இந்த காரை வாங்கிட்டு, மைலேஜ் பத்தலைனு சொன்னா நியாயம் இல்லையே! பாஷ்யம் யுவராஜ் அவர்கள்தான் ஸ்பெக்டரை ஓட்டிப் பார்த்துட்டுச் சொல்லணும்!
from ஆட்டோமொபைல் https://ift.tt/cOPSFLp
0 Comments