நீங்கள் ஹோண்டா கார் ஷோரூமுக்குப் போனால் அமேஸும் சிட்டியும்தான் உங்களை வரவேற்கும். இவை இரண்டுமே செடான்கள்தான்! அட ஆமாங்க! முன்னொரு காலத்தில் B-RV, C-RV, W-RV... என்று ஹோண்டாவில் A,B,C,D-யில் இருக்கும் பல எழுத்துக்களில் SUV கள் இருந்தன.

ஆம், இப்போதைய நிலைமை – ஹோண்டா கார் கம்பெனியில் இருந்து எந்த எஸ்யூவியுமே இப்போது விற்பனையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதனால்தான் ‘எலிவேட்’  என்றொரு எஸ்யூவியை லாஞ்ச் செய்து, மிகப் பெரிய திருவிழாவாககக் கொண்டாடியது ஹோண்டா. 

ஹோண்டா எலிவேட் (Honda Elevate)

இப்போ ஹோண்டா செம ஹேப்பி அண்ணாச்சி! இருக்காதா பின்னே! டெலிவரியிலும் சேல்ஸிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது எலிவேட். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 200 கார்களை ஹோண்டா நிறுவனம் டெலிவரி செய்ததை, லாஞ்ச் ஆனதைவிட மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். 

இந்த எலிவேட் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு மிட் சைஸ் எஸ்யூவி. இதை C செக்மென்ட் என்றும் சொல்வார்கள். மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் இப்படி ஒரு சாதனை செய்வது என்பது சாதாரண விஷயமில்லை. காரணம், க்ரெட்டா என்றொரு அரக்கன். மேலும் இன்னும் சில அரக்கர்கள் இருக்கிறார்கள்.

Honda Elevate Interior

கியா செல்ட்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வாகன் டைகூன், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர்  என்று பல கார்கள் போட்டி போடும் இந்த செக்மென்ட்டில், எலிவேட் இப்படி ஒரு சாதனையைச் செய்ததை வேறெந்த நிறுவனங்களும் செய்யவில்லை என்பது ஸ்பெஷல். 

எலிவேட்டின் சில ப்ளஸ் – மைனஸ்கள் பற்றிப் பார்க்கலாம்! 

  • இந்தக் காரின் இடவசதி, இதன் மிகப் பெரிய ப்ளஸ். இதை ஹோண்டா நினைத்தால், ஒரு 7 சீட்டராக்கி இருக்கலாம். ஆனால், இது ஒரு 5 சீட்டர் எஸ்யூவி. அதனால், பின் பக்க இடவசதி செம தாராளமாக இருக்கிறது. லாங் டிரைவுக்கு சூப்பர் சொகுசாகப் பயணிக்கலாம் பின் பக்கப்  பயணிகள். 

  • வெளிநாடுகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் HR-V, BR-V போன்ற எஸ்யூவிகளின் டிசைனை இன்ஸ்பயர் செய்து இதை டிசைன் செய்திருக்கிறார்கள். அதனால், இதன் டிசைன் மட்டுமில்லை; இதன் பானெட்டும் உயர்ந்திருப்பதால், இதை யார் வேண்டுமானாலும் எளிதாக ஓட்டலாம் எனும் அளவுக்கு இதன் டிரைவிங் பொசிஷன் இருக்கிறது. 

Boot Space 458 Ltrs
  • சிட்டியின் ப்ளாட்ஃபார்ம் என்றாலும், இதை அதைவிட 50 மிமீ அதிக வீல்பேஸ் கொண்டிருப்பதும் இந்த இடவசதிக்குக் காரணம். சொகுசான பயணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதன் சஸ்பென்ஷன்கள் மேலும் கீழும் நன்றாகப் போய் வர வேண்டும் என்பதற்காக, இதன் வீல் ஆர்ச்சுகளையும் பெரிதாக்கி இருக்கிறார்கள். லாங் டிராவல் சஸ்பென்ஷன் செம! அட, இத்தனை பெரிய காராக இருந்தாலும், இதை சிட்டியைத் திருப்புவதைவிட ஈஸியாக யு–டர்ன் அடித்து விடலாம் என்றால் நம்புவீர்களா! ஆம், இதன் டர்னிங் ரேடியஸ், ஹோண்டா சிட்டியைவிட 1 மீட்டர் குறைவு. எலிவேட்டில் 5.2 மீட்டர்தான் TR (Turning Radius).

  •  சீட் இடவசதி மட்டுமில்லாமல், இதன் பூட் ஸ்பேஸும் சூப்பர். 458 லிட்டர் என்பதால், ஏகப்பட்ட லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். இந்த வசதியம் பத்தவில்லை என்றால், இந்த பின் சீட்களை 40:60 ரேஷியோவில் மடக்கிக் கொண்டால், இன்னும் பூட் ஸ்பேஸ் ரெடி! இதில் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் நல்ல ரிசொல்யூஷனிலும், சூப்பராக இயங்குவதாகவும் சொல்கிறார்கள். 

  • அட, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை 220 மிமீ. இதை ஒரு க்ளாஸ் லீடிங் என்று சொல்லலாம். இது மிகப் பெரிய ஆஃப்ரோடர்களான ஃபார்ச்சூனர் போன்ற கார்களைவிட 5 மிமீதான் கம்மி! எலிவேட்டை எடுத்துக் கொண்டு தாராளமாக ஆஃப்ரோடு செய்யலாம். இதன் டாப் எண்டில் 17 இன்ச் அலாய் வீல்களும் உண்டு. ஓட்டுதலும் கிரிப்பும் நன்றாகக் கிடைக்கும்.

5 Seater
  • எலிவேட்டில் இருப்பது சிட்டியில் இருக்கும் அதே பெட்ரோல் இன்ஜின் செட்அப்தான். அதாவது 1.5லிட்டர் i-VTEC எனும் ஒரே இன்ஜினில்தான் ஓடுகிறது எலிவேட். இதன் பவர் 121bhp மற்றும் 145Nm டார்க். இதன் டேங்க் கொள்ளளவு 40 லிட்டர். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில்தான் வருகிறது. இதில் மேனுவல் கியர்பாக்ஸில், ஷார்ட் த்ரோ என்பதால் ‘சட் சட்’ என்று கியர் மாற்றி ஓட்ட ஓட்டுநர்கள் விரும்புகிறார்கள். சிலருக்கு ‘லாங் த்ரோ’தான் பிடிக்கும். இது சிட்டியைவிட 150 கிலோ எடை அதிகம் என்பதால், அதை காம்பென்சேட் செய்வதற்காக! இதன் எடை 1,206 – 1,258 கிலோ வரை. 

  • கேமராவைக் கொண்டு இயங்கும் ADAS (Advanced Driver Assistance System) தொழில்நுட்பம் இருக்கிறது. அதற்குப் பெயர் ஹோண்டா சென்ஸிங் சிஸ்டம். இதில் தானாக லேன் மாறும் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், கொலிஷன் மிட்டிகேஷன் சிஸ்டம், ரோடு டிப்பார்ச்சர் மிட்டிகேஷன் சிஸ்டம், எதிர் வரும் வாகனங்களைக் கண்கூசாமல் இருக்கச் செய்யும் ஆட்டோ ஹை பீம் ஃபங்ஷன் போன்றவை இருக்கின்றன.வயர்லெஸ் சார்ஜிங்கும் உண்டு.

  • எலிவேட்டில் மைனஸாகச் சொல்லப்படும் சில விஷயங்களும் இருக்கின்றன. இதின் பனோரமிக் சன்ரூஃப் கிடையாது; சாதாரண சிங்கிள் பேன் சன்ரூஃப்தான். மற்ற போட்டி கார்களில் இருப்பதுபோல் வென்டிலேட்டட் சீட்ஸ், மழை விழுந்தால் தானாக இயங்கும் ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், 360 டிகிரி கேமரா, முன் பக்க பார்க்கிங் சென்ஸார் போன்றவை மிஸ்ஸிங். மிக முக்கியமான மைனஸ்ஸாகச் சொல்லப்படுவது  – சிட்டியைப்போல் ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் இந்த எலிவேட்டில் இல்லை. இருந்தாலும், இதன் மைலேஜ் சுமார் 15 கிமீ தருகிறது. ஆட்டோமேட்டிக் 16 கிமீ தருவதாகவும் சொல்கிறார்கள். 

நீங்கள் எலிவேட் வாங்கியிருந்தால், உங்க கமென்ட்ஸைச் சொல்லுங்க!



from ஆட்டோமொபைல் https://ift.tt/A4Z1saw