இப்போது நீங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால், 1.5 லட்சத்துக்கு மேல் எடுத்து வைக்க வேண்டும். விலை குறைந்த பைக்குகளைத் தயாரிக்கும் டிவிஎஸ்–ஸிலும் அப்படித்தான். ஐக்யூப் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை 1.60 லட்சம் வருகிறது. உடனே ரொம்பக் கற்பனைக் குதிரையை ஓட்டிடாதீங்க பாஸ்! இதைத் தாண்டி டபுள் மடங்கு விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கொண்டு வந்திருக்கிறது டிவிஎஸ்.
அதன் பெயர் X. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2.50 லட்சம். அப்படியென்றால், ஆன்ரோடு 2.70 லட்சத்துக்கு மேல் வந்து விடும். இப்போதைக்கு இந்தியாவில் இந்த டிவிஎஸ் X ஸ்கூட்டர்தான் விலை அதிகமான ஸ்கூட்டராக இருக்கப் போகிறது.
இந்தியாவில் விலை அதிகமான ஸ்கூட்டர் மட்டுமில்லை; சில வசதிகளில் இந்த X ஸ்கூட்டர்தான் ஃபர்ஸ்ட் இன் செக்மென்ட்டாக இருக்கப் போகிறது. ஆம், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஸ்கூட்டர்; இப்போதைக்கு 105 கிமீ–க்கு மேல் டாப் ஸ்பீடு போகும் ஸ்கூட்டர்! இப்படிப்பட்ட X ஸ்கூட்டரைப் பற்றிச் சில விஷயங்கள் பார்க்கலாம்!

ஏற்கெனவே Creon என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2018 எக்ஸ்போவில் கான்செப்ட்டாக அறிமுகப்படுத்தி இருந்தது டிவிஎஸ். அது நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த க்ரியான் ஸ்கூட்டரை அடிப்படையாக வைத்துத்தான் இது டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ப்ளாட்ஃபார்மின் பெயர் XLETON. நல்ல ஹை ஸ்ட்ரென்த் அலுமினியம் ஸ்டீலில் இதன் கட்டுமானம் இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல இருக்கிறது இந்த X. அதாவது சுஸூகி பர்க்மேன், ஹோண்டா PCX மாதிரியான ஒரு பெரிய ஸ்கூட்டர். ஆனால், இது ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் என்கிறது டிவிஎஸ். இதன் சீட் உயரம் நார்மலாக 770 மிமீ உயரத்தில்தான் இருக்கிறது. இதனால் உயரம் கம்மியானவர்கள்கூட எளிதில் ஆக்ஸஸ் செய்து கொள்ளலாம்.
அதேநேரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஸ்ப்ளிட் சீட் பார்ப்பது இதுதான் முதல் தடவை. இதில் 11kW பீக் பவர் கிடைக்கிறது. இதன் பீக் டார்க் 40Nm. 2.6 விநாடிகளில் இது 0–40 கிமீ–யைத் தொட்டு விடுமாம். பெரிய ஸ்கூட்டர் என்றால், பெரிய பேட்டரி வேண்டும். அதனால், இதில் 4.4kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இருக்கிறது. இது சிங்கிள் சார்ஜுக்கு 140 கிமீ தூரம் போகும் என்று IDC (Indian Drive Cycle)படி க்ளெய்ம் செய்கிறது டிவிஎஸ். இதில் X Home எனும் ரேப்பிட் சார்ஜர் கொடுக்கிறார்கள். இதில் 0–50% சார்ஜிங்கை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிவிடலாம். கூடவே ஆப்ஷனலாக 3kW ஃபாஸ்ட் சார்ஜரும் தருகிறார்கள். அல்லது 950W போர்ட்டபிள் சார்ஜர் மூலம் 4.30 மணி நேரத்தில் 0–80% சார்ஜ் ஏற்றிவிடலாம்.
இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். முன் பக்கம் 200மிமீ / பின் பக்கம் 195 மிமீ டிஸ்க். அட, சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான் இதன் ஸ்பெஷலே! 12 இன்ச் வீல்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், செக்ஷன் சூப்பர். 100/110 முன் பக்கம் மற்றும் பின் பக்கம்.

வசதிகளிலும் சூப்பர். 10.25 இன்ச் TFT டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், இதன் ஆங்கிளை நமக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். புளூடூத், மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் அலெர்ட்கள், கால் அலெர்ட்கள் என்று பல தொழில்நுட்பங்கள் உண்டு. மேலும் நீங்கள் ஓர் இடத்தில் யாருக்காகவோ வெட்டியாகக் காத்திருந்தால், இதில் உள்ள ஸ்க்ரீனில் வீடியோ கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது போன்றவற்றைச் செய்து கொள்ளலாம். இதற்கு PlayTech Entertainment System என்கிற சாஃப்ட்வேர் இருக்கிறது.
ஆனால், இதில் ஃப்ளாட்டான ஃப்ளோர் போர்டு இல்லை என்பதால், கட்டைப் பை வைத்து ஷாப்பிங் போவது, பொருட்கள் வைத்துக் கொள்வதெல்லாம் சான்ஸே இல்லை. அந்த ஃப்ரேமின் முதுகே ஆக்கிரமித்துக் கொள்கிறது இந்த இடத்தை. அதேபோல், அண்டர் சீட் ஸ்டோரேஜும் மற்ற ஸ்கூட்டர்களைவிடக் கொஞ்சம் கம்மிதான். வெறும் 19 லிட்டர்தான்.
இது எப்போ வரும்னுதானே கேட்கிறீங்க?
X–ன் புக்கிங்கை டிவிஎஸ் தொடங்கிவிட்டாலும், நவம்பர் 2023–ல்தான் இதன் டெலிவரி தொடங்கப் போகிறது. அதுவும் பெங்களூருவுக்கு மட்டும்தானாம். நம் ஊருக்கு வர்றதுக்கு 2024 மார்ச் ஆகலாம் என்கிறார்கள். முதல் 2,000 கஸ்டமர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்சும், 18,000 ரூபாய் தள்ளுபடியும் உண்டாம்.
from ஆட்டோமொபைல் https://ift.tt/NVaxX5q
0 Comments