மாருதியின் பெலினோதான் டொயோட்டாவின் கிளான்ஸா; மாருதி பிரெஸ்ஸாதான் டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர்; மாருதி சுஸூகியின் கிராண்ட் விட்டாராதான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்.
இப்படி மாருதியின் கார்களெல்லாம் டொயோட்டா பேட்ஜில் ஓடிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். இனோவா ஹைக்ராஸை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து மாருதியில் இருந்து இன்விக்டோ எம்பிவி வரவிருப்பதும் உங்களுக்குத் தெரியும்.
இந்தியாவில் மட்டுமில்லை; தென்ஆப்பிரிக்காவிலும் இது நடைமுறை வழக்கம். உதாரணத்துக்கு – மாருதி சுஸூகியின் செலெரியோதான் டொயோட்டா விட்ஸ் (Vitz) எனும் பெயரில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் பெலினோ கார் – ஸ்டார்லெட் சூப்பர் மினி கார் (Starlet) ஆகவும், சியாஸ் கார் பெல்ட்டா (Belta) ஆகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.
மாருதி காரில் ரீபேட்ஜ் ஆகாமல் இருந்த கார் எர்டிகாவாக இருந்து வந்தது. இப்போது எர்டிகாவும் ரூமியான் (Rumion) எனும் பெயரில் மாறி ஓடவிருக்கிறது. இந்த அசத்தல் எம்பிவி பற்றி சில லிஸ்டிக்கிள்ஸ் பார்க்கலாம்.


-
இது இனோவா க்ரிஸ்ட்டா, இனோவா ஹைக்ராஸ், வெல்ஃபயர் கார்களுக்குப் பிறகு டொயோட்டாவில் இருந்து வரும் 4–வது எம்பிவி. இது இனோவா லைன்அப்புக்குக் கீழே வரவிருக்கிறது. அதனால் இதன் விலை இனோவாவுக்குக் கீழே இருக்கும். அதேபோல், எர்டிகாவைவிட 30,000–த்துக்கு மேல் அதிகமாக இருக்கலாம்.
-
இந்த ரூமியான் கார் ஏற்கெனவே 2021–ல் இருந்து தென் ஆப்பிரிக்காவில் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கே வரக்கூடிய மாடலில் எர்டிகாவில் இருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக முன் பக்க கிரில், யூனிக்கான அலாய் வீல் டிசைன், டொயோட்டா லோகோ என்று மாறவிருக்கிறது.
-
இன்டீரியரைப் பொருத்தவரை டேஷ்போர்டு, எர்டிகாவைப் போலவே இருக்கும். எக்யூப்மென்ட் லிஸ்ட்டும் அதே!
-
ரூமியானின் தென்ஆப்பிரிக்கா காரின் இன்டீரியர் ஆல் பிளாக் தீமில் இருக்கும். இந்தியா ரூமியானில் எர்டிகாவைப்போலவே பீஜ் தீமில்தான் இருக்கும்.
-
டெக்னிக்கல் அம்சங்களைப் பொருத்தவரை – எர்டிகாவில் இருக்கும் அதே 103bhp பவர் மற்றும் 137Nm டார்க் தரும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இருக்கும்.
-
கியர்பாக்ஸைப் பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பாக்ஸும் இருக்கும்.
-
எர்டிகாவைப்போலவே 3 வரிசை சீட்களும், 8 சீட் ஆப்ஷனுடனும் இருக்கும். இது இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் 2023–க்குள் வரவிருக்கிறது.
-
‘பெட்ரோல் ஓகே... அது இருக்கா’ என நீங்கள் கேட்பது புரிகிறது; அந்த சிஎன்ஜி மாடல்தானே! சிஎன்ஜியைப் பொருத்தவரை – அதைப் பற்றி இன்னும் தகவல் சொல்லவில்லை டொயோட்டா. இது பின்னாளில் வரலாம்; ஆனால் நிச்சயம் வரும். எல்லோரது எதிர்பார்ப்பும் சிஎன்ஜிதானே!
from ? ஆட்டோமொபைல் https://ift.tt/ieb1SW5
0 Comments