லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்ன தெரியுமா? எந்தப் பொருளாக இருந்தாலும் எது சிறுசோ, அதற்குத்தான் இப்போது மவுசு அதிகம். மொபைல்கள், கேட்ஜெட்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும், இது பொருந்தும்.
அதாவது கைக்கு அடக்கமாக, காம்ப்பேக்ட்டாக இருந்தால், அவற்றை ‘மைக்ரோ’ என்று சொல்வார்கள். ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் இப்போது ‘மைக்ரோ’ வார்த்தைதான் ட்ரெண்டிங். அதாவது, நச்சென்று 4 மீட்டருக்கும் குறைவாக, குட்டியாக இருந்தால் அது மைக்ரோ. லேட்டஸ்ட்டாக ஹூண்டாய், ‘எக்ஸ்ட்டெர்’ என்றொரு மைக்ரோ எஸ்யூவியை அறிமுகம் செய்தது. ஆனால், இதற்கு முன்பாகவே மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் மைக்ரோ கார்களை அறிமுகம் செய்திருக்கின்றன. டாடாவின் நானோ, மஹிந்திராவின் ரேவா உங்களுக்கு நினைவிருக்கும். அப்படி, இந்த மைக்ரோ கார் செக்மென்ட்டில் இப்போது இந்தியாவுக்கு ஒரு புது வரவு காத்திருக்கிறது. அது நம் ஊர் கம்பெனி இல்லை; ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லிஜியர் (Ligier) என்றொரு நிறுவனம், இந்தியாவில் ஒரு மைக்ரோ காரைச் சத்தமில்லாமல் டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருக்கிறது.லேட்டஸ்ட்டாக ஸ்பை ஷாட்களில் அடிபடவும் ஆரம்பித்து விட்டது லிஜியரின் அந்த மைக்ரோ காரின் பெயர் மைலி (Ligier Myli).

1980-களில் இருந்து மைக்ரோ கார்களை உருவாக்கி வருவதில் எக்ஸ்பெர்ட்டான நிறுவனம் லிஜியர். நீங்கள் ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர் என்றால், உங்களுக்கு இந்த லிஜியர் நிறுவனத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். 24 மணி நேரம் நடக்கும் Le-Man ரேஸ்களில் ஓடிய ஃபார்முலா–1 ரக கார்களை டிசைன் செய்தது இந்த Ligier நிறுவனம்தான். இன்னொரு விஷயம் – இந்த மைலி கார், ஒரு எலெக்ட்ரிக் கார் என்பது இன்னும் ஸ்பெஷல். இது அளவில் டாடா நானோவைவிடச் சிறுசாக இருக்கலாம்.

ஐரோப்பாவில் இந்த கார் ஏற்கெனவே G.OOD, I.DEAL, E.PIC and R.EBEL என 4 வேரியன்ட்களில் விற்பனையாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 ட்ரிம்கள் சிங்கிள் சார்ஜுக்கு 63 கிமீ ரேஞ்ச் தரும். அடிப்படை வேரியன்ட்டான G.OOD வேரியன்ட்டில் அலாய் வீல்கள், (13 இன்ச் ஸ்டீல் வீல்கள்), மியூசிக் சிஸ்டம் போன்றவை இருக்காது. அடுத்த I.DEAL வேரியன்ட்டில் 14 இன்ச் அலாய் வீல்கள் இருக்கும். ஆனால், எல்லாவற்றிலும் 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ் உண்டு.
டாப் வேரியன்ட்களான E.PIC மற்றும் R.EBEL மாடல்கள், சிங்கிள் சார்ஜுக்கு 123 கிமீ வரை ரேஞ்ச் தருமாம். இதில் 15 இன்ச் அலாய் வீல்கள், 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, ஆண்ட்ராய்டு ஆட்டோ – ஆப்பிள் கார் ப்ளே எனப் பல வசதிகள் இருக்கும். இது எம்ஜி நிறுவனத்தின் காமெட் காரைப்போலவே, குறைந்த வீல்பேஸ் கொண்ட 3 டோர் ஹேட்ச்பேக்காக இருக்கிறது. அதனால், இதை சிட்டிக்குள் ‘சட் சட்’ என பார்க்கிங் செய்து வளைத்து நெளித்து ஓட்ட முடியும். ஆனால், எம்ஜி காமெட், சுமார் 200 கிமீ –க்கு மேல் ரேஞ்ச் தரும் என்பதை நினைவில் கொள்க!
இந்தியாவில் லிஜியர் மைலி டெஸ்ட் டிரைவ் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, விரைவில் ஒரு மைக்ரோ எலெக்ட்ரிக் போட்டி நடக்கப் போகிறது என்பது தெரிகிறது. இதன் விலை சுமார் 5 – 6 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே எடுபடும். சீக்கிரம் வா மைலி!
from ? ஆட்டோமொபைல் https://ift.tt/R40PaQf
0 Comments