பஜாஜ் நிறுவனத்தைக் கொஞ்சம் சாஃப்ட் ஆன நிறுவனம் என்று நினைத்துவிடக்கூடாது. கொஞ்சம் ரக்கட் ஆன நிறுவனம் என்று நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது.
ஆம், பிரிட்டிஷ் நிறுவனமான ட்ரையம்ப்புடன் கூட்டணி வைத்து, மிரட்டலான 2 பைக்குளைக் கொண்டு வரப்போகிறது பஜாஜ். இது ‘திடுதிப்பு’ என்று எடுத்த முடிவு இல்லை; ரொம்ப நாள்களாகவே இந்தத் திட்டம் போய்க்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் நிறுவனம் என்பதால், நேற்று லண்டனில் அந்த 2 பைக்குகளை லாஞ்ச் செய்துவிட்டது ட்ரையம்ப். அடுத்து என்ன… இந்தியாதான்!
இந்தியாவுக்கும் லண்டன் பைக்குகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கலாம். இந்திய மாடல்களைப் பொறுத்தவரை – பெரிதாக ஸ்பெக் மற்றும் விவரங்கள் தெரியவில்லை. இருந்தாலும், கசிந்தவரை தகவல்களைப் பகிர்கிறோம்.

ட்ரையம்ப்பின் கூட்டணியில் பஜாஜ் கொண்டுவரப்போகும் அந்த பைக்குகள் – ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X. இது 400 சிசி பைக் கேட்டகிரி என்பதால், இது வெறித்தனமாக ராயல் என்ஃபீல்டு புல்லட், ஹன்ட்டர் போன்றவற்றைத்தான் டார்கெட்டாக வைத்துக் களமிறங்கப்போகிறது. ஸ்க்ராம்ப்ளர் என்பதால், வெறும் சிட்டி ரைடிங்குக்கு மட்டுமல்லாமல், லாங் ரைடுக்கும் ஏற்ப இதை டிசைன் செய்திருக்கிறதாம் ட்ரையம்ப். அதனாலேயே 400சிசி-க்கு இந்த பைக் இருக்கும். சிசி அதிகமானால், லாங் டிரைவிங்கில் ஹீட் அடிக்குமே! அதற்காகத்தான் இதை லிக்விட் கூல்டு இன்ஜின் செட்-அப்பாகக் கொண்டு வரப்போகிறது பஜாஜ். மெஷின் டைப்பில் கூலிங் ஃபின்கள் இருப்பதால், நிச்சயம் காலில் சூடு அடிக்காது என்று எதிர்பார்க்கலாம். ஆனால், சிங்கிள் சிலிண்டர்தான். இதுபோதுமே! கூடவே இதன் இன்ஜின் கேஸிங்குகள் – பவுடர் கோட்டிங்குகளுடன் இருக்கும்.
இதன் பவர் செமையாக இருக்கிறது. 39.5bhp@8,000rpm. 37.5rpm@6,500Nm இருக்கும். கார்களுக்கு இணையான பிக்–அப் விருட்டென்று கிடைக்கும். கண்டிப்பாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான்.
டிசைனைப் பொறுத்தவரை, நியோ – ரெட்ரோ தீமுடன் கொஞ்சம் மில்லினியலுக்கும் ஏற்ப பல அம்சங்கள் இருக்கும். முக்கியமாக, கண்ணீர்த்துளி வடிவ பெட்ரோல் டேங்க் செம மாடர்னாக இருக்கும். அனலாக் ஸ்பீடோ மீட்டர்தான் இருக்கும். ஆனால், கூடவே மல்ட்டி ஃபங்ஷன் எல்.சி.டி ஸ்க்ரீன் இருக்கப்போகிறது.
இதன் சீட் உயரம் 790 மி.மீ. அதனால், எல்லோரும் ஆக்ஸஸ் செய்யும்படி இருக்கும். இதுவே ஸ்க்ராம்ப்ளர் மாடலின் உயரம் 835 மி.மீ இருக்கும். இதன் எடையும் 170 முதல் 179 கிலோ இருக்கும். சிட்டிக்குள் Manoeuvering (புகுந்து புறப்படுதல்) பக்காவாக இருக்கும். லைட் வெயிட்டான 17 இன்ச் அலாய் வீல்கள் இரண்டிலும் இருக்கும். இதில் ஸ்க்ராம்ப்ளரில் மட்டும் 19 இன்ச் இருக்கலாம். இரண்டிலுமே மெட்ஸெல்லர் ஸ்போர்ட்டெக் டயர்கள் இருக்கப்போகின்றன. அப்போ விலை காஸ்ட்லி!

சாதா டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனுக்குப் பதில் – முக்கியமாக, இதில் USD (Upside Down Forks) ஃபோர்க்ஸ் இருக்கும். அதுவும் தங்க நிறத்தில் ஜொலிக்கும். இப்போது இதுதானே ட்ரெண்டிங்! 43 மி.மீ தடிமன் என்பதால், கையாளுமை வேற லெவலில் இருக்கும். சஸ்பென்ஷன் டிராவல் அநேகமாக 140 மி.மீ–உம், பின் பக்கம் 130–மி.மீ-உம் இருக்கும். ஸ்க்ராம்ப்ளரின் டிராவல் 150–மி.மீ-ஐத் தொடலாம். இதனால், சஸ்பென்ஷன் ஸ்பீடைவிட ஸ்க்ராம்ப்ளரில் சொகுசாக இருக்கும்.
இதில் ஸ்க்ராம்ப்ளர் 400X மாடல்தான் கொஞ்சம் வசதிகள் அதிகமாகவும், காஸ்ட்லியான பைக்காகவும் இருக்கும். இரண்டிலும் அப்–ஸ்வெப்ட் எக்ஸாஸ்ட்கள் இருப்பதால், பல மி.மீ தண்ணீருக்குள் வாட்டர் வேடிங் செய்யலாம். முன் பக்கம் 300 மி.மீ டிஸ்க்கும், பின் பக்கம் 230 மி.மீ டிஸ்க்கும் இருக்கலாம். இதில் ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் 320 மி.மீ இருக்கும்.
எல்லாம் ஓகே! ராயல் என்ஃபீல்டு, கே.டி.எம், கவாஸாகி போன்றவற்றுக்குப் போட்டியாக வர வேண்டும் என்றால், இதன் விலை முக்கியத் திருப்புமுனையாக அமைந்தால் மட்டும்தான் ஜெயிக்க முடியும். இது லண்டனில் உள்ள ட்ரையம்ப்பின் R&D சென்டரில் டெவலப் செய்யப்பட்டாலும், இதன் தயாரிப்பு, பராமரிப்பு, விற்பனை போன்ற முக்கிய விஷயங்களை பஜாஜ்தான் கவனித்துக்கொள்ளப்போகிறது. அதனால், விலையும் சர்வீஸும் மக்களை ஏமாற்றாது என்றே தோன்றுகிறது.

நிற்க; இருந்தாலும், இது பெரிய பைக்; பெரிய கம்பெனி என்பதால் – வசதிகள் கன்னாபின்னாவென இருக்கப் போகின்றன. நாம் ஆக்ஸிலரேட்டர் முறுக்குவதற்கு ஏற்ப சென்சார் மூலம் கன்ட்ரோல் செய்யும் ரைடு பை வயர் தொழில்நுட்பம், க்ளட்ச் திணறாமல் பைக் ஓட்ட உதவும் ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் க்ளட்ச், கிரிப்புக்குப் பெயர் போன காஸ்ட்லியான மெட்ஸெல்லர் ஸ்போர்ட்டெக் டயர்கள், வழுக்கும் ஏரியாக்களில் கிச்செனப் போக ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், முன்/பின் என இரண்டுக்கும் பாதுகாப்பான டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வண்டி திருடு போகாமல் தடுக்க உதவும் இன்ஜின் இம்மொபைலைஸர், முழுக்க எல்.இ.டி லைட்டிங் என ஏகப்பட்ட வசதிகள் இருப்பதால், விலை அதிகமாகுமோ என்கிற கேள்வியும் இருக்கிறது. 4.5 லட்சத்துக்கு மேல் இதை எக்ஸ் ஷோரூம் விலையில் பொசிஷன் செய்தால், மக்கள் புல்லட் பக்கம் தடதடக்க வாய்ப்பிருக்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் இதை லாஞ்ச் செய்ய இருக்கிறார்கள். ஆனால், டெலிவரிக்கு இந்த ஆண்டு கடைசி ஆகிவிடும் என்கிறார்கள். இந்த பஜாஜ் – ட்ரையம்ப் கூட்டணியில் வரப் போகும் ஸ்ட்ரீட் 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X பைக்குகளின் விலை எத்தனை லட்சத்துக்குள் இருக்கலாம் என்று நீங்கள் கமென்ட்டில் சொல்லுங்களேன்!
from ? ஆட்டோமொபைல் https://ift.tt/lIth0TR
0 Comments